பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

தட்ப வெப்ப நிலை

தட்டுமுட்டுச் சாமான்கள்

தடங்கல்களும் இடைஞ்சல்களும்

தடங்கல் மடங்கல் இன்றிச் சொல்லுதல்

தடங்கலும் தாமதமும் ஏற்படல் (கல்கி)

தடதடத்துந் தள்ளாடியும் நடத்தல் (மனுமுறை)

தடித்துப் பெருத்த மனிதன்

தடுத்து நிறுத்தி வைத்தல்; தடுத்து விலக்குதல்

தடுத்து மடுத்து நிறுத்துதல்

தடுமாறித் தத்தளித்தல்

தடுமாறித் தவித்துப் போதல்

தடுமாறித் தள்ளாடி நடத்தல்

தடைவிடைகளால் விலக்குதல்

தண் அம் கதிர் வெண்மதி (நைட 364)

தண் உலாம் மழலைப் பசுங்கு தலை (குமர 15)

தண் என்று குளிர்ந்த

தண்கதிர் மதியத் தணி நிலா (கலித் 121)

தண்டாத் தகராறு செய்யா திருத்தல்

தண்டா முண்டாப் பேர் வழி - தண்டு மிண்டுப் பேர்வழி

தண்டுமிண்டு - ஏறுக்குமாறு, அடாதது

தண்மை அடக்கிய நுண்ணிறைத் தெண்ணீர் (பெருங்க

2-57-95)

தண்மையும் மென்மையும் உடைய மலர்

தணித்துத் தாழ்த்திப் பிடித்தல்

தத்தளித்துத் தடுமாறித் தயங்குதல் (பிரதாப அதி 34)

தத்தித் தடுமாறிப் பேசுதல்

தத்தித் தொத்திச் சுவரில் ஏறுதல்

தத்துப் பித்தென்று பேசுதல்