பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருதி எடுக்கும் விழாக்கள் ஒழிவின்றி நிகழ்ந்து கொண்டே யிருக்கும். விழாக்கான வேற்றுார் மக்களும் வந்து குழுமுவர். அதுகுறித்து வரும், பாணர் முதலாம் இசைவாணர்கள், தம் இசைக்கருவிகளோடு, அப்பேரூர்ப் பொதுவிடங்களிலும், வீதிகளிலும் புகுந்து இசைபாடிச் செல்வர். இத்தகைய பெருவளமும் பண்பாடும் மிக்க பேரூர்கள், பலப்பல கொண்ட பெருமையுடையது அந்நாடு.

ஆனால், அந்நாட்டின் இப்பெருமையெல்லாம் ஒரு காலத்தில் இருந்தன. இன்று, அதை நாடு எனக்கூறுவதற்கும் நாவராது. அத்துணைக் கேடுற்றுவிட்டது. அது. பண்டொரு காலத்தில், அது அத்துணைப் பெருமை பெற்றிருந்தது உண்மை. அது, பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் படை, அந்நாட்டின் மீது போர் தொடுக்காத முன்பு.

வளம் மிக்க நாடு பெற்ற அந்நாட்டு அரசனுக்கு, ஒரு பேரரசன் பகையைத் தேடிக் கொள்வது பொருந்தாது என்ற அறிவாவது இருக்க வேண்டும். அல்லது தன் நாட்டின் பெருவளம் கண்டு பிறநாட்டவர் போர் தொடுத்தால், அப் படையெடுப்பை எதிர்த்து அழித்துத், தன் நாட்டைக் காத்துக் கொள்ளவல்ல, வரம்பின்றிப் பெருகிய பெரும்படையாவது வைத்திருக்க வேண்டும். இரண்டும் இல்லை அவன்பால். அவன் நிலை இருவாக இருப்பவும், பல்யானைச் செல்கெழுகுட்டு வனின் பகையைத் தேடிக் கொண்டான் அந்நாட்டரசன்.

மயிர் சீவாது, ஆனால் அம்மயிர் அகத்தே அடங்கிப் புறம் தோன்ருமல் இருக்குமாறு போர்த்துப் பண்ணிய போர் முரசிற்குத், தினை முதலாம் கலங்களை, வீரர் தம் மார்பைக் சீவிக் கொண்ட குருதியில் கூலந்து தூவிப் பலியூட்டிப், போர் முரசு கொட்டி விட்டான் பல்யானைச் செல்கெழுகுட்டுவன்,

-7- 97

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/107&oldid=1293745" இலிருந்து மீள்விக்கப்பட்டது