பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்முரசொலி கேட்டாவது, அந்நாட்டரசன் அஞ்சி அடங்கினன என்றால் இல்லை. எதிர்த்து நின்ருன். தன்பால் ஓர் அரிய கோட்டை உளது என்ற செருக்கு அவனுக்கு. அதல்ை சீரழிந்து போன்ை. பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் வரம்பிலாப் பெரும் படையில், ஓர் அங்கமாய் வரும் யானைக் கூட்டத்திற்கு, அக்கோட்டை எம்மாத்திரம் அதன் தாக்குதலை அரைநாழிகையும் தாங்க மாட்டாது த க ர் ந் து விட்டது கோட்டை. அரண் அழிவுற்றதும், அப்படை நாட்டுள் புகுந்தது. படை புகுந்தால் பாழுருத நாடும் உண்டோ? வளம் அழிந்து, வனப்பு இழந்து பாழுற்றுப் போய்விட்டன; அந்நாட்டுப் பேரூர்கள் எல்லாம். பண்டு விழாமலிந்திருந்த வீதிகளில், இன்று வாழ்வோரைக் காண்பதும் அரிதாகிவிட்டது. அக் கொடுமையைக் கூறவும் கூசிற்று நாக்கு.

தன்நாட்டு இயற்கைப் பொருள்களின் நிகழ்ச்சியைத், தன் அரசியல் நிகழ்ச்சியோடு தொடர்பு படுத்திக்காணும் அறிவு, அவ்வரசனுக்கு இருந்திருக்குமாயின், அவ்வழிவினை வராது தடுத்திருக்கலாம். அவல் இடிக்கும் மகளிர்பாடும் வள்ளைப்பாட்டின் ஒசை கேட்ட அப்போதே, நாரை முதலாம் நீர்ப் பறவைகள், மகளிர் வந்துவிட்டனர்; ஆகவே, வயல்களை விட்டு வெளியேறி, அவர் கண்ணிற்படா இடம் சென்று,கரந்துகொண்டால், அவர் மறைத்ததும்இரைதேடும், நம் தொழிலை இழவாமல் மீண்டும் தொடங்கலாம் ' என்று எண்ணி அகன்ருேடி அடங்கியிருந்தால், மகளிர் அவற்றை, அவற்றின் வாழிடமாகிய மரங்களிலும் தங்கவிடாது விரட்டி யிருக்கமாட்டார். அதைவிடுத்து, அவர் வந்தபிறகும், அயிரை கவரும் தம் அடாத் தொழிலை விடாது.மேற்கொண்ட மையால், அவர்களால் விரட்டப் பெற்றன. இதை உணர்ந்து பல்யானைச் செல்கெழுகுட்டுவன் முரசொலி கேட்டபோதே

98

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/108&oldid=1293747" இலிருந்து மீள்விக்கப்பட்டது