பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் பரந்து கிடந்து இரைமேயும். தடம்தாள் நாரை இரிய = பெரிய கால்களைக் கொண்ட ந ைர க ள் அகன்று போகுமாறு. அயிரைக் கொழுமீன் ஆர்கைய = அயிரையாகிய .ெ கா முத் த மீன்களைத் தின்பன்வாகிய கொக்கு முதலாம் நீர்ப்பறவைகள். மரந்தொறும் குழாஅலின் = மரங்கள் தோறும் கூடியிருப்பதால். வெண்கை மகளிர் = வளையணியா வறுங்கையினராகிய இளம் மகளிர். வெண்குருகு ஒப்பும் = அவ்வெண்பறவைக் கூட்டத்தை ஒட்டித்திரியும் நாடாகவும். அ ழி யா வி ழ வின் = இடையரு விழாக்களை யுடைமையால், இழியாத் திவரின் வயிரிய மாக்கள் = குற்றமிலா இசை எழுப்பும் யாழ் உடையராகிய பாணர்கள். பண் அமைத்து எழிஇ = பண்ணுெடு பொருந்திய இசையை எழுப்பியவாறே. மன்றம் நண்ணி=மன்றங்களை அடைந்தும். மறுகு சிறைபாடும் = வீதிகளில் புகுந்து வீடு தோறும் சென்று பாடிச் செல்லும். அகன்கண் வைப்பின் நாடு மன்= அகன்ற இடங்களை உடைய பே ரூ ர் க.ளை க் கொண்ட நாடாகவும் விளங்கின. அளியமன் = அந்நிலை இப்போது கழிந்து போகவே, பெரிதும் இரங்குதற்குரியவாயின.

10 !

101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/111&oldid=1293750" இலிருந்து மீள்விக்கப்பட்டது