பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடையவரேனும், தம் வா ழி ட ம் வந்து சேரும் விருந்தினர்க்கும், வழிப்போகும் புதியோர்க்கும், சினைமாவை, இன்று ஒருவர், நாளை ஒருவர் என முறை வகுத்துக்கொண்டு பலநாள் தந்து ஒம்பும் பேருள்ளம் படைத்தவராவர். மன்னர்க்கும் மாநிலத் தலைவர்க்கும் உரிய காட்டு நாட்டை ஒட்டிய மலைநாட்டு மக்களின் வாழ்க்கை வனப்பு, அத்தகைத்து.

இத்தகு பயன்மிகு நிலப்பரப்புகளோடு, பயன் இழந்த இடங்கள் சிலவும், அவர்க்கு உரிமையுடையவாய் இருந்தன. மனத்தாலும், மாண்புமிகு நிறத்தாலும் பல்வேறு வகைப் படும் மலர்கள் மலர்வதும் உதிர்வதுமாய பயன், அற்றுப் போக, செவவரக்குப் போலும் நிறம் பெற்ற செம்மணல் பரந்த சிறு சிறு குன்றுகள், பற்பல குறுக்கிடும் மலைக்காட்டு வழிகள், மகளிர் மிதியணிந்தல்லது கடக்க மாட்டாக் கொடுமை. யுடைது. வானளாவ உயர்ந்த மலையிடையே அமைந்த இத்தகைய வழிகளைக் கொண்டனபோலும் நிலப்பகுதிகளையும் அவர் நாடு பெற்றிருந்தது.

ஐந்திணை வளமும் அமையப் பெற்ற அவர் நாடு அரண் அற்றுப் பகைவர் எளிதில் புக இடம் அளிக்கும் இழிவுடையதோ என்றால், அதுவும் இல்லை. அவர் நாடு, கடலும் காடும் ஆகிய இயற்கை அரண்களோடு, அடர்ந்த காவற்காடு, ஆழ்ந்த அகழி, அரிய பொறிபடை பற்பல அமைந்த பெருமதில் ஆகியவற்வைக் கொண்ட பெரிய பெரிய கோட்டைகளையும் கொண்டுளது. அங்ங்னமாகவும், அவ். வரசியல் தூதுவர்கள். பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் போர்முரசின் முழக்கம் கேட்ட அந்நிலையே அஞ்சி விதிர் விதர்க்கின்றனர் என்றால், அவன் ஆற்றல் பெருமை கண்டு, புலவர் வியந்து நிற்பதில் வியப்பில்லையே.

|(}5

105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/115&oldid=1293754" இலிருந்து மீள்விக்கப்பட்டது