பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

25

30

40

முழவு இமிழ் மூதூர் விழவுக் காணுஉப் பெயரும் செழும் பல்வைப்பின் பழனப்பாலும், ஏனல் உழவர் வரகு மீது இட்ட கான்மிகு குளவிய அன்புசேர் இருக்கை மென்தினை நுவனே முறைமுறை பகுக்கும் புன்புலம் தpஇய புறவுஅணி வைப்பும், பல்பூம் செம்மல் காடு பயம் மாறி அரக்கத்தன்ன நுன்மணல் கோடு கொண்டு ஒண்ணுதல் மகளிர் கழலொடு மறுகும் விண்ணுயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும் பணைகெழுவேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து கடலவும் காட்டவும் அரண்வலியார் நடுங்க, முரண்மிகு கடுங்குரல் விசும்பு அடைபு அதிரக் கடுஞ்சினம் கடாஅய் முழங்கும் மந்திரத்து அருந்திறல் மரபின் கடவுட் பேணியர் உயர்ந்தோன் ஏந்திய அரும்பெறல் பிண்டம் கடுங்கண் பேய் மகள் கைபுடையூஉ நடுங்க நெய்த்தோர் து உய நிறைமகிழ் இரும்பலி எறும்பு பூசா இறுப்பூது மரபின் கடுங்கண் காக்கையொடு பருந்து இருந்து ←ጋዜሇ ஓடாப் பூட்கை ஒண்பொறிக் கழற்கால் பெரும்சமம் ததைந்த செருப்புகல் மறவர் உருமுநிலன் அதிர்க்கும் குரலொடு கொளைபுணர்ந்து பெருஞ்சோறு உகுத்தற்கு எறியும் கடுஞ்சின வேந்தே ! நின் தழங்கு குரல் முரசே'.

துறை: பெருஞ்சோற்று நிலை வண்ணம்: ஒழுகு வண்ணம் தூக்கு: செந்துரக்கு பெயர்: புகன்ற ஆயம்

108

108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/118&oldid=1293757" இலிருந்து மீள்விக்கப்பட்டது