பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திறல் மாவின் கடவுள் பேணியர் = வெல்லற கரிய திறல்

படைத்த போர் முரசுக்கடவுளை வழிபடுவான் வேண்டி,

உயர்ந்தோன் = வழிபாடற்றும் உரிமை மிக்க உயர்குடிப்பிறப்பாளன். ஏந்திய = படைத்த. அரும்பெறப் பிண்டம் பெருதற்கு அரிய பலியின. கருங்கண் பேய் மகள் =

கரியபெரிய கண்களை உடைய பேய்மகள். கைபுடையூ நடுங்க - கைகளைப் புடைத்துக் கொண்டு நடுங்க. நெய்த்தோர் தூய = குருதி தூவிய நிறைமகிழ் இருப்பலி=மிக்க மதுவோடு கூடிய பெரிய அப்பலி. எறும்புமூசா இறுப்பூது மாயின் = எறும்புப் மொய்க்காத வியப்பிற்கு உரியதாகவும். கருங்கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர - (அப். பலியினைக்) கரிய கண்களையுடைய காக்கையுடன் பருந்துகள் இருந்து உண்ணுமாறு. கடுஞ்சின வேந்தே - மிக்க சினம்

உடைய வேந்தே ஓடாப் பூட்கை = போரில் பின்னிடாத

கொள்கையினையும். ஒண்பொறிக் கழற்கால்=சிறந்த பாராட்.

டினுக்குரிய வெற்றிச் செயல்கள் பொறிக்கப்பட்ட வீரக்கழல்

கட்டிய கழல்கால்களையும் உடைய, பெரும் சமம் ததைந்த

= பெரிய போர்க்களங்களில் பகைவர் போர்த் தந்திரங்களை

யெல்லாம் கெடுத்துவிட்ட செருப்புகல் மறவர் = போர்த்

தொழிலை எப்போதும் விரும்பும் வீரர்கள். நிலன் அதிர்க்கும்

உருமுக்குரலொடி=நிலத்தை நடுங்கப்பண்ணும் இடிபோலும்

தம் பெருங்குரலோடு. கொளைபுணர்ந்து = இசை விருந்தை

யும் கலந்து. பெரு ஞ் சோ ற் று = உணவை விருந்தாகப்

படைத்தற் பொருட்டு. நின்தழங்கு குரல் முரசு எறியும்,

= உன்னுடைய ஓயாது முழங்கும் கொடைமுரசும் அடித்து முழங்கப்படுகிறது.

1 12

112

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/122&oldid=1293762" இலிருந்து மீள்விக்கப்பட்டது