பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணும் ஆர்வம் உந்த, உன்நாடு நோக்கி விரைந்துவந்த யான், இடைவழியில் உள்ள உன்பகை நாட்டைக் கடந்து வந்தேன்; அப்பகைநாட்டைப் பண்டே அறிந்தவன் நான்: அந்நாட்டின் வளமும் வனப்பும் கண்டு, கழிபேரின்பம் கொண்டவன் நான். புதுமணல்பரந்த மேட்டுநிலங்களில் மருதமும், முருக்கும், காஞ்சியும் வானுற ஓங்கி வளர்ந்து நிற்கும்; அம்மரங்கள் பல்வகைப் புள்ளினங்கட்கும் வாழ்வளிக்கும் வனப்புடைய வாதலின், அங்கு அப்பறவைகளின் பல்வேறு ஒலிகளும் ஒன்றுகலந்து ஓயாது ஒலித்துக்கொண்டே யிருக்கும். முருக்கு, காஞ்சி முதலாம் மரங்களின் செந்நிற மலர்கள் உதிர்ந்து படிந்து கிடக்கும் மணல்மேடு, செந். நெருப்பு மலையெனச் சிறந்து காட்டும்; அம்மணல் மேட்டினை அடுத்துப், பெருநீர் நிலையிருப்பதால், நாரை சங்கு போலும் நீர் வாழினங்கள், அம்மணல் மேட்டில் நிரைநிரையாக உலா வரும். நீர்நிலைக்கு அணித்தாக உள்ள நன்செய்களில், வேள்வித்திக்கு விளக்கம் காட்டும் செந்தாமரை மலர்களும், செவ்வாம்பல் மலர்களும் மலர்ந்து, சிந்தைக்கு விருந்துாட்டும். பண்டு கண்டு களித்த அக்காட்சி நலத்தை, இப்போது கண்டிலேன்; மாருகக் காணக்கூசும் கொடுங்காட்சிகளையே காணநேர்ந்தது. மக்கள் நடமாட்டத்தைக் காண்பதே அரிதாகிவிட்டது. மக்கள் வழங்குவது அற்றுப் போகவே, அந்நாட்டுப் பெருவழிகள் எல்லாம், முள்ளும், புல்லும் முளைத்துத் தொல்லை தருவவாயின. வானளாவ உயர்ந்த மாடங்களெல்லாம் மண்மேடாக, ஆடவரும் பெண்டிருமாக மக்கள் மகிழ்ந்துறைந்த ஆங்குக், காட்டுப்பசுக்கள், காளைகளோடு கலந்து கூ ட் ட ம் கூட்டமாய்த் திரியலாயின. சுருங்கச் சொன்னல், நாடு காடாகி விட்டது. வேந்தே! அக்காட்சியைக் கண்டேன்; கலங்கிற்று என் உள்ளம். வழியிடைக் கண்டாரை அணுகி, அந் நிலைமாற்றத்திற்காம் காரணம் யாது? எனக் கேட்டேன். அவர் கூறியது, என்னை

3

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/13&oldid=1293632" இலிருந்து மீள்விக்கப்பட்டது