பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறலத்து அவர்தம் அரும்பொருள் கொள்ளைகொல்லும் கொடுமைமிகு வாழ்வுடையராய் வாழ்ந்தமையால், பொதினிக் குரிய நெடுவேள் ஆவியாலும், வேங்கடத்துக்கு உரிய கள்வர். கோமான் புல்லியாலும் வென்று அடக்கத்தக்க விறல். படைத்தவர் மழவர். அன்னர் இன்னர் ஆதல் அறிந்து, பல்யானைச்செல்கெழுகுட்டுவன், கொங்கரை வென்று அவர் நாட்டைத் தனதாக்கிக் கொண்டான், பூழியரையும், மழவரை. யும் தன்படையாளராக ஏற்றுப் பணிகொண்டு பயன் பெற்ருன். பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் இப்பெரும் செயல்கண்ட புலவர் பெருமக்கள், 'கொங்கர் நாடு அகப்படுத்த வேல்கெழுதான்ை வெருவருதோன்றல்!” (பதிற்றுப் பத்து: 22) 'பூழியர் கோவே', 'மழவர் மெய்ம்மறை” (பதிற்றுப்பத்து: 21) என்பனபோலும் புகழ்மிகு பெயர்கள் சூட்டிப் பாராட்டினர்கள்.

கொங்கர்தம் நாடும், பூழியர், மழவர்களின் கொற்றமும் துணைசெய்யக், கோலோச்சிய பல்யானைச் செல்கெழு. குட்டுவன், அகப்பா என்ற அரணுக்கு உரியான் ஒரு வீரன், தன் தாள்பணிய மறுத்துத் தருக்கித் திரிவதுகண்டு கடுஞ்சினம் கொண்டான். அவன் பணியாமைக்குக் காரணம், அவன் அகப்பாஅரணின் அமைப்புநலனே என அறிந்தான்். முற்றி யிருந்து முறியடிக்கத் துணியும், மாற்ருர் படைகளைப், பாய்ந்தழித்துப் போரிடற்காம் பரந்து அகன்ற செண்டு வெளியினை யும், கணையமரம் செறிக்கப் பெற்ற கதவுகள் பொருந்திய வாயில்களையும், ஐயவித்துலாம் போலும் அரியபொறிப்படை களையும், கண்ணுெளி புகாக் காவற்காட்டினையும், ஆழ்ந்து அகன்ற அகழியினையும், நெடிய பெரிய மதில்களையும் உடையது அவ்வகப்பா அரண். அத்தகு அரண் அமையப் பெற்றமையால், அவ்வரனுக்குரியான், அடிபணிய மறுத்து வந்தான்்; ஆற்றல்மிகு அரசர்களும், அரண் அருமை அறிந்து

14

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/24&oldid=1293646" இலிருந்து மீள்விக்கப்பட்டது