பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளிர்களின் துணையை வேண்டிப் பெற்றனர். நில அரண், நீர் அரண், மலையரண், முதலாம் தம்நாட்டகத்து அரண் களைச் செப்பம் செய்து, வலுவுடைய வா ஆக்கினர். இவ்வாறு அரியபெரிய துணைகளைப் பெற்றும், அழிக்கலாகா அரண்பல பெற்றும், அவர்தம் அச்சம் அகன்றிலது. பல்யானைச் செல்கெழுகுட்டுவல்ை பாழுற்றுப்போகும் போகூழ், எந்த நேரத்தில் வந்து, தம்மை அண்டிவிடுமோ எனும் நினைவால் நடுங்கி வாழ்வாராயினர்; அத்துணைப் பேராற்றல் வாய்ந்தவகை வளர்ந்துவிட்டான், பல்யானைச் செல்கெழுகுட்டுவன். அப்பேரரசர்களின் நடுங்கு நிலைகண்டு பழிப்பார்போல், இவன் புகழ்பாடி மகிழ்ந்தார்கள் புலவர்கள்.

பணகெழுவேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து கடலவும் காட்டவும் அரண்வலியார் நடுங்க”.

-பதிற்றுப்பத்து: 30

வேங்கடம்முதல் குமரிவரைப் பரவிய பெருநாடுமுழுவதையும் தன் ஒருகுடையே நிழல்செய்ய உலகாளும் பெருநிலை வாய்க்கப்பெற்ற பல்யனைச் செல்கெழுகுட்டுவன், அவ்வெற்றிக்கு வழித்துணை புரிந்தவள், தன் நாட்டகத்ததாகிய அயிரைமலைவாழ் கொற்றவையே என உணர்ந்து, அவளை வழிபட விரும்பின்ை. அயிரைமலை அடைந்தான்்; பரந்தகன்ற தன்மார்பில் கொற்றவாள் கொண்டு ஆக்கிய விழுப்புண்ணிலிருந்து வழியும் குரு தி கலந் த செஞ்சோற்றைப் படைத்துப் பரவிப் பேரின்பம்கண்டான்.

.ெ கா ற் ற ைவ க் கு வழிபாடாற்றிக் குறை தீர்த்த கொற்றவன், தன் வெற்றிப்புகழ் இவ்வையகமெங்கும் சென்று பரவவேண்டும்; தமிழகம் முழுவதும், தன் ஆணைக்கீழ் அடங்கியுலது என்பதை உலகோர் உணரவேண்டும் என்று

16

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/26&oldid=1293648" இலிருந்து மீள்விக்கப்பட்டது