பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரும்பின்ை; அதல்ை தன் வேட்கைதிர்க்கும் விழாவொன்று எடுக்க விழைந்தான்். உடனே, தன் யானைப் படையின் ஒரு பகுதியைச், சேரனுட்டைச் சேர்ந்த கீழ்க்கடலுக்கும், மற்றொரு பகுதியைத் தன்குலத்தவர்க்கே உரித்தாகிய மேலைக்கடலுக்கும் போக்கி, இரு கடல்நீரையும் குடம் குடமாக ஒரேபகலில் கொணர வழிவகுத்தான்்; அவ்வாறு அவை கொணர்ந்த, அவ்விருகடல்நீரிலும் படிந்துஆடிப், பெருவிழாச் செய்து பேரின்பம்கொண்டு பெருநிலை பெற்ருன். பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் இப்பெருஞ்செயல் இரண்டும், அவன் குலக்குருசிலாம் இளங்கோவடிகளாரின் பா ரா ட் டு ப் பொருளாகும், பெருமையுடைய வாயின.

'உருகெழு மரபின் அயிரை மண்ணி

இருகடல் நீரும் ஆடினேன்’’.

சிலம்பு : 28 : 145.146.

அரியணையேறிய அந்நாள் தொட்டு, போர் போர் என ஒயாப்போரே மேற்கொண்டுவந்த பல்யானைச் செல்கெழு. குட்டுவன், தமிழகம் முழுவதையும் தன்ஆணைக்கீழ்க் கொண்டு விட்ட பின்னர், அப்பெருநாட்டில் அமைதிநிலவும் நல்லரசு நடாத்த விரும்பின்ை. தன்ஆட்சிக்கீழ் வந்துற்ற நாடு, தன் ஒருவளுல் தனித்திருந்து ஆளமாட்டாப் பரப்புடையது என்பதை உணர்ந்தான்்; மேலும், அப்பெருவாழ்வளிக்கும் பேரின்பத்தைத், தான்்.ஒருவனே தனித்திருந்து நுகர நினைத்தால், அது தன்குலத்து வந்தார்க்கு வருத்தம் தரும்: விளைவு உட்பகை வளர்ந்து, அரசப்பெருந்தேரின் ஆணியை அழித்துவிடும் என்றும் அறிந்தான்்; அதனல், தன்குடிவந்தார் ஒவ்வொருவரையும், அவரவர்தம் தகுதிக்கொத்த நிலைகளில் இருத்தி, நல்லரசு நிலவச்செய்து நீள்புகழ் கொண்டான். x

-2- 17

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/27&oldid=1293649" இலிருந்து மீள்விக்கப்பட்டது