பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யானைச் செல்கெழுகெட்டுவன், இவ்வாறு கொற்றம் விளங்கக் கோலோச்சியிருந்தமை கேட்டு, அவன் அரசவை அடைந்து, அழகிய பத்துப்பாக்களை ஆக்கி, அவன் வெற்றிப் புகழை விளங்கப்பாடினர், புலவர் பாலைக்கெளதமனர்' அப்பாக்களின் அரும்பெரும் சொற்சுவை பொருட்சுவைகளை நுகழ்ந்து பேரின்பம் கண்ட புரவலன், அப்புலவர்பால் பேரன்புகொண்டு, அவர்விரும்பும் பரிசில் அளிக்க முன் வந்தான்்; அரசன் குறிப்பறிந்த புலவர், "வேந்தே! யாம் விரும்பும் பரிசில் பொன்னே, பொருளோ அன்று; யானும் என்மனைவியும் இறவாப் பெருவாழ்வளிக்கும் வீட்டுலகம் அடைதல் வேண்டும்; அதுவே யாம்விரும்பும் பரிசில்; ஆகவே, அதற்கு வழிசெய்ய வேண்டுகின்றேன்.’’ என்றார்; அதுகேட்ட அரசன், அப்பெருவாழ்வு அளிக்கவல்ல பத்துப் பெருவேள்விகளை முறைப்படிச் செய்து முடித்து, அவர்க்கு அவ்வாழ்வு அளித்து, அகம் மகிழ்ந்தான்்; பல்யானைக் செல்கெழு. குட்டுவனின், இப்பெரும்பணியையும் பாராட்டி மகிழ்ந்தார் இளங்கோவடிகளார்.

'நான்மறையாளன் செய்யுள் கொண்டு மேனில உலகம் விடுத்தோன்’’.

இவ்வாறு, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வான். உறையும் தெய்வமா மதித்துப் பாராட்டத்தக்க பெருநிலைபெற்ற பல்யானைச் செல்கெழுகுட்டுவன், தன்வாழ்நாளின் இறுதிக் காலத்தை, இடையறவில்லா இன்பநிலையில் கழிப்பான் விரும்பி, நெடும்பாரதாயனர் அடிச்சுவட்டினைப் பின்பற்றிச்சென்று, துறவு மேற்கொண்டு, நாடுவிட்டுக் காடு புகுந்து நோன்பு மேற்கொண்டான். இவ்வாறு எவ்வகை நோக்கினும் இயற்கையோடியைந்த இனிய வாழ்வுகண்ட விழுமியோனகிய, அவன்புகழ் அனைத்தையும், தொகுத்துத் தொடுத்து அளித்துள்ளார் புலவர் ஒருவர்; *.

18

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/28&oldid=1293650" இலிருந்து மீள்விக்கப்பட்டது