பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரொலி சென்றுபுக, ஆங்குப்புகும் அவர்கள், ஆங்கே சிதறிக்கிடக்கும் முத்துச்சிப்பிகளையும், பவளக்கொடிகளையும் வாரிச்சென்று பயன்கொள்வர் என, அது உரைக்கும் நெய்தல் நிலநலம், நினைந்து நினைந்து மகிழ்தற்கு உரித்து.

“இணர்ததை ஞாழல் கரைகெழு பெருந்துறை மணிக்கலத்தன்ன மாயிதழ் நெய்தல் பாசடைப் பணிக்கழி துழை இப் புன்னை வால் இணர்ப் பகுகினைக் குருகு இறைகொள்ளும் தாழ் அடும்பு மலைந்த புணரி, வளைஞரல இலங்குநீர் முந்தமொடு வார்துகிர் எடுக்கும் தண் கடல் படப்பை'.

-பதிற்றுப்பத்து: 30: 1-8

காட்டு நாட்டு வாழ்வினர் வேட்டுவர்; அவர்கள் எக்காலமும் காந்தள்மலர்க் கண்ணிசூடி, கையில் வில்லேந்தியே திரிவர். தம் வேட்டையில் பட்ட விலங்குகளே தம் வாழ்வுச்செல்வமாம் ஆதலின், வேட்டுவர் காட்டுப் பசுவைக் கொன்று, அதன் இறைச்சியையும், வலிமைமிக்க வேழங்களை,வீழ்த்தி, அதன்:வெண்கோடுகளையும் விலையாகக்கொடுத்துத், தமக்குவேண்டும் மதுமுதலாம் பொருள்களைப்பெற்று மகிழ்வர் என மலைக்காட்டு நாட்டின் மாண்பினையும் உணர்த்துகிறது அப்பத்து.

காந்தளங் கண்ணிக் கொலைவில் வேட்டுவன்

செங்கோட்டு ஆமான் ஊளுேடு, காட்ட

மதன் உடை வேழத்து வெண்கோடு கொண்டு

பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்

குன்றுதலை மணந்த புன்புலம்’’. -

- - பதிற்றுப்பத்து: 30; 9-13

23

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/33&oldid=1293656" இலிருந்து மீள்விக்கப்பட்டது