பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராறுகளின் பாய்ச்சலால் பயன்கொள்வது, வயல்கள் மலிந்த மருதநிலம். தேன்சொட்டும் மலர்நிறைந்த மருத மரங்கள் வேரொடு காய்ந்துபோமாறு விரைந்துபாயும் பெரு. வெள்ளத்திற்கு அ னை யாக த், தாம் பண்டுஅமைத்த வைக்கோல்புரிசெறித்துச் செய்த மணற்கரிசைகள், வெண்ணுரைபரக்க வரும் செம்புனலால் அலைப்புண்டு அழிந்து போகவே, ஊரெலாம் திரண்டு ஓவெனும் ஆரவாரம் எழ அணைகட்டி ஆக்கம் காணும் ஆர்வம் மிக்கவர் வாழ்வதால், ஆங்குக், கரும்பு முதலாம் நன்செய் பொருள்கள் காலமல்லாக்காலத்தும் விளைத்து பயன்விளக்கும்; அவ்வாறு உழைத்து உறுபயன்கண்ட அம்மருதநிலத்து மக்கள், வகைவகையான விழாக்கள் பல கண்டு கழிபெரும் களிப்பில் ஆழ்ந்து போவார். அத்தகு அழகையும் அச்செய்யுள் அகத்தே கண்டு நாம் மகிழலாம்.

'காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது அரிகால் அவித்துப் பலபூ விழவின், தேம்பாய் மருதம் முதல்படக் கொன்று வெண்தலைச் செம்புனல் பரந்து வாய் மிகுக்கும் பலசூழ்பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலில் புகன்ற ஆயம் முழவு இமிழ் மூதூர் விழவுக் காணுஉப் பெயரும் செழும்பல் வைப்பின் பழனப்பால்’’.

-பதிற்றுப்பத்து : 30: 14-21

தினை முதலாம் புல்லுனவே விளையும் - புன்மையுடைய குறுங்காட்டு நாடாம் மு ல் லை நில ம் என்ருலும், ஆங்கு வாழ்வார் அயராமுயற்சியும், அயரா அன்பும் உடையராவர். கொல்லைகளை உழுது, தினைவிளைத்தும், வரகு வைக்கோல் வேய்ந்த குடிசைகளில் வாழ்ந்தும், வளங்

24

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/34&oldid=1293657" இலிருந்து மீள்விக்கப்பட்டது