பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு அவ்விருவகைப்புகை எழுப்பும் இருவேறு நறுமணங்களையும் நுகர்ந்தவாறே அரசன் பெருங்கோயிலை நோக்கி நடந்த புலவர், அப்பேரூர் வீதிகளில் கொட்டி வைத்திருக்கும் வகைவகையான பொருள் வளங்களைக் கண்ணுற்ருர். வானத்தில் எழுந்து படரும் அப்புகை தரும் மணமே, வையகத்தார் அனைவரையும், ஏன், வானுலகத்தவரையும்கூட வருகவருக என வரவேற்கத்தக்கனவாக, விதிகளில் காணலாகும் அவ்வற்ருப் பெருவளங்களைக் காண நேர்ந்தால், வானவர், தங்கள் வானுலக வாழ்க்கையையும் வெறுத்து, அ ப் .ெ ப ரு ந க ர் வாழ்க்கையை விரும்பி வந்தடைவர். அத்துணை வளம்பெருக ஆளும் அந்நாட்டு மன்னனின் குன்ருப் பெரும்புகழை எண்ணி எண்ணி வியந்தவாறே சென்ற புலவர் அரண்மனையை அணுக அணுக, வீரர்களும் விருந்தினர்களும் குறைவின்றிக் குடித்துமகிழும் வகையில், மது, மழைநீர்போல் மண்டிக்கிடக்கும் கள்ளுக் கடைகளும், அக்கடைகட்கு அணித்தாக, அடுத்தடுத்து அமைந்திருக்கும், யானைப்படை முதலாம் நாற்படை விடுதி களும், அப்படை வீடுகளை அடுத்து, அடித்தவழிக் கடுத்தஒலி எழுப்பும் போர் முரசுக்கட்டிலும், அதற்கு அணித்தாக, அரசவையை ஒட்டிற்ைபோல், பாடிபைந்தமிழ் வளர்க்கும் புலவர் பெருமக்கட்கும், பண் இசைத்து ஏழிசை வளர்க்கும் பாணர் முதலாம் ஏனைய, இரவலர்க்கும்,வரையாது வழங்குதற் பொருட்டுப், பகைவர் நாடுகளிலிருந்து பற்றிக் கொணர்ந்த பொன்னும் நவமணியும் போலும் பொருட் செல்வங்களைக் கொட்டிவைத்திருக்கும் அரசியற் பண்டாரமும் அமைந்து கிடக்க, அவற்றையெல்லாம் கண்டவாறே அரசவை புகுந்தார்.

அரசவை புகுந்த புலவர், ஆங்கு அரியணைக்கண் வீற்றிருக்கும் அரசனைக் கண்டார். அவன் மார்பு மண்

30

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/40&oldid=1293666" இலிருந்து மீள்விக்கப்பட்டது