பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாசுற்றிருந்து. அதுகண்டு, என்னே! மன்னன் மார்பில் மண்படிந்திருப்பதா’’ என்று எண்ணி ஏங்கினர். அந்நிலையில் அவர்க்கு அணித்தாக இருந்தவர்கள், அவர் ஏக்கம் அறிந்து 'பெருந்தகையீர்! அம்மண்ணுக்கும் ஒரு மாண்பு உளது. பகைவென்ற போர்க்களத்தில், மன்னன்நாற்படை பொருதவழி எழுந்த புழுதிபடிந்து உண்டான மண்மாசு அது. ஆகவே, சேரநாட்டு வீரரின் சிறப்பிற்குச் சான்று பகர்ந்து திகழும் அம்மண்மாசைப்போக்க, மன்னனுக்கு மனம் இல்லை' என்று கூறக் கேட்டு, பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பேராற்றல் அறிந்து பெருமிதம் உற்ருர்,

மன்னனைக் கண்டு, அவன் மாண்புணர்ந்து மகிழ்ந்த புலவர், அரசவைக்கண் மற்றும் யார்யார் அமர்ந்துள்ளனர் என்பதை அறியும் அவாவுடையராய் அரசவையை ஒருமுறை உற்று நோக்கினர். முல்லைக்கண்ணி பூண்ட பூழியரும் வெட்சி முதலாம் போர்ப்பூக்கள் பலவும் கலந்து கட்டிய கண்ணிசூடிய மழவர்குல மறவர்களும் ஆங்கு அமர்ந்திருந்தனர். பூழியர் என்பார், செந்தமிழ் நிலம்சேர் பன்னிரு நிலங்களுள் ஒன்ருன பூழிநாட்டை, செருப்பு என்ற மலையரணை அரசிருக்கையாகக் கொண்டு ஆள்பவர். போர் ஒழிந்த காலங் களில் ஆனிரை ஒம்புவதும், மலையும் காடும் மண்டிய கடறுகளில், அரவுமிழ்ந்து விட்டுப்போன மாணிக்க மணிகளைத் திரட்டுவதுமாகிய .ெ த ா ழி ல் மேற்கொள்பவர். காவிரி யாற்றிற்கு வடக்கே, கோணுட்டின் தலைநகராம் உறையூர்க்கு மேற்கே, மழநாடு, மழகொங்கம் எனும் பெயர்களோடு விளங்கிய, ஒருசிறு நிலப்பகுதியை ஆள்பவர் மழவர். சிறந்த குதிரைவீரர், நிரை கவர்தல், நிர மீட்டல், மண்கவர்தல், மண் காத்தல், அரண் முற்றுதல், அரண் மீட்டல் ஆகிய அனைத்துப்போரிலும் வெற்றியே பெறவல்ல வீறுடைமை விளங்க, அப்பல்வேறு போர்களுக்கும் உரிய, வெட்சி முதலாம்

31

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/41&oldid=1293667" இலிருந்து மீள்விக்கப்பட்டது