பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரும்பு மெய்பரந்த - அவர் உள்ளத்தின் வேட்கை மிக்கு அவர் உடலிலும் வெளிபட்டுத் தோன்றுவதற்குக் காரணமாகும். பெரும் பெயர் ஆவுதி = பெறற்கரும் பெரும் பயன்தரவல்ல வேள்விப்புகையும். வருநர் = தம் மனைநோக்கி வரும் புதியோர் வரையார் வாரவேண்டி - வரம். பின்றி உண்ண வே ண் டி. யு. ம். விருந்து = விருந்தினர். கண்மாருது = தம் இடம் விட்டு வேறிடம் சென்றுவிடாது. உணி இய - ஈண்டே இருந்து உண்ண வேண்டியும் விரும்பி, பாசவர் ஊனத்து அழித்த வால் நினக் கொழுங்குறை = ஆட்டுவணிகர் கறிகொந்து மனையில் இட்டுக் கொந்திக் கொடுத்த வெண்ணிறக் : கொழுப்பு படிந்த இறைச்சியை. குய் இடுதோறும் = கொதிக்கும் நெய்யில இட்டுத் தாளிதம் செய்யுந்தோறும், கடல் ஒலி கொண்டு = கடல் ஒலிபோல். ஆளுது ஆர்ப்ப = ஒயாது ஒலிக்குமாறு. கெழுநகர் நடுவண் = வளம் கொழிக்கும் பேரூர் நடுவில். அடும்மை எழுந்து அடுநெய் ஆவுதி - அடுதலால் எழும் கரும்புகையோடு எழுந்த அடிசிற்கண் பெய்யப்படும் சுடுநெய் எழுப்பும் புகையும், இரண்டுடன் கமழும் நாற்றமொடு = என்ற இருவகைப் புகையும் தரும் நறுமணத்தால். வானத்து நிலைபெறு கடவுளும் = வானுலகில் நி லே .ெ ப ற வாழ்வோராகிய கடவுளரும், பேணிவிழைதக = பேணிவிரும்புமாறு. ஆர்வளம் பழுநிய = குறையாவளம் நிறைந்த ஐயம் தீர் சிறப்பின் - உண்மையான சிறப்பினையும். மாரி அம் கள்ளின் = மழை நீர் போல் வார்க்கப்படும் மதுவினையும். போல்வல்யான = போரில் வல்ல யானையினையும். போர்ப்புறு முரசம் கறங்க= ஆனேற்றுத்தோல் போர்த்த போர் முரசு முழங்க. ஆர்ப்புச் சிறந்து = போர் ஆரவாரம் மிகுத்து. நன்கலம் தருஉம் - பகைவர்தம் அரிய பெரிய நன்கலங்களைக் கைப்பற்றிக் கொண்டும். மண்பகுமார்ட் = போர்க்களப் புழுதியாம் மண் படிந்த மார்பினையும் உடையவனே! முல்லைக்கண்ணி பல்லான்

36.

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/46&oldid=1293673" இலிருந்து மீள்விக்கப்பட்டது