பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கயிறுகுறு முகவை

பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பெருமைகானும் ஆர்வம் உந்த, அவன் உறையும் வஞ்சிமாநகர் வந்தடைந்த புலவர் பாலைக் கெளதமனர், அக்காலத்தே, தமிழகத்தில் அவனொத்த அரசர் பலர் வாழ்ந்திருக்கவும், அவர்களுக் கெல்லாம் இல்லாத பெரும்புகழ் அவனுக்கு வாய்த்திருப்பதற்காம் தலையாய காரணத்தைக் கண்டு கொண்டார். பல்யானைச்செல்கெழுகுட்டுவன் பிறந்தகுடி, பாராள்வதற்குரிய பண்பெலாம் நிறைந்த பழம்பெரும் குடியாகும். நல்லாட்சிக்கு அடித்தளமாம் நல்லியல்புகள் அனைத்தையும், அக்குடிவந்தார் ஒவ்வொருவரும் வழிவழியாகப் பேணிக் கொணர்ந்து, பல்யானைச்செல்கெழுகுட்டுவன்பால் தந்தே மறைந்துள்ளனர். அத்தொல்பெரும் செல்வங்கள் தொலைவின்றித் திரண்டிருந்தமையால், திறன்மிக்க நல்லாட்சி நடாத்தி தலைநிமிர்ந்து வாழ்கின்ருன். விழுமிய ஆட்சியை விரும்புவார், விலக்க வேண்டுவனயாவை, விரும்பி ஏற்க வேண்டுவனயாவை என்ற தெளிந்த அறிவுடையய்ை விளங்கினன்.

அரசனுக்கு உறுதி பயக்கும் அறிவுரைகள் உரைத்து, உயர்விக்கும் துணைவர்களைத் துரத்திவிட்டு, அதனல் அவனையே யல்லாமல், அவனை அண்டி வாழ்பவரையும் அழிக்க வல்ல பேராற்றல் வாய்ந்தது சினம். அதனல், சேர்ந்தாரைக் சொல்லி எனப்பெயர் சூட்டி, அதைப் பழிப்பர் பெரியோர். ஆகவே, தன்னை எதிர்நோக்கி ஒரு பெரிய உலகமே வாழத் தக்க, பெரிய பொறுப்பு மிக்கோளுகிய அரசன், சினம் உடையதைல் கூடாது.

39

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/49&oldid=1293676" இலிருந்து மீள்விக்கப்பட்டது