பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலை புரிதல் போலும் குற்றம் புரிந்தார்க்குக், கொலேயே தண்டமாகக் கொடுத்து நெறிகாப்பது, அரசர்க்கு அறமாம் என்ருலும், கொடிய தண்டங்கள் அளிப்பதையே, அரசர் அன்ருட வழக்கமாகக் கொண்டு விட்டால், அவர் அரசு வாழாது. 'கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்'. ஆகவே தம் அரசவாழ்வு நின்று நிலைபெறுதலை வேண்டும் வேந்தர்கள், குற்றத்திற்கு ஏற்ற தண்டத்தைக் கூறுங்கால், கொடுமை கொள்பளிக்கக் கூறிச், செயல்படுத்துங்கால், கொடுமை குறைத்தே அளித்தல் வேண்டும். 'கடிது ஒச்சி மெல்ல எறிக; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர்”. ஆ க .ே வ, கை இகந்த

தண்டத்தைக், காவலர் கருத்துள்கொள்ளல் ஆகாது.

நாட்டில் நல்லரசு நடைபெற வொட்டாது, இடை நின்று தடுக்கும் கொடுமைகளாகிய கடுஞ்சினம், மிக்ககாமம், கழி கண்னேட்டம், அச்சம், பொய், அன்புமிகவுடைமை, கையிகந்ததண்டம் ஆகியவற்றை, அறவே விலக்கித், தம் உள்ளத்திற்கும் எட்டாத தொலைவிடத்தே துரத்தி, நாடாண்டு நற்புகழ் பெற்றவர்கள், பல்யானைச் செல்கெழு குட்டுவனின் பண்டையோர். அம்மட்டோ அல்லது கடிந்து ஆட்சிபுரிந்த அவர்கள் ஆட்சிக்கு நல்லது புரிவனவற்றை, நாள்தோறும் பேணி மேற்கொண்டொழுகினர். அதல்ை அவர் நாட்டு வயல்களேயல்லாமல், கடலும் காடுகளும் கணக்கின்றி வளம் நல்க வாழ்ந்தார்கள்; அதனல், நாடாண்ட அவர்களேயல்லாமல், அவர் நாட்டில் வாழ்ந்த மக்களும், வற்ரு வளம்பல பெற்றிருந்தமையால், வளம்வேண்டிப் பிறரைவருத்துவதோ, அவர் பொருள்பால் வேட்கைமிகுந்து கவரக்கருதுவதோ செய்திலர். இவ்வாறு அரசியல் முறையில், குறைசிறிதும் காணுப் பேரறிவுடையராகி, அவ்வறிவையும் செவ்விய நெறிக்கண் செயற்படுத்தும் திறமுமுடையராகி வாழ்ந்து

4

2

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/52&oldid=1293680" இலிருந்து மீள்விக்கப்பட்டது