பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பெற்ற வெற்றிகளுள் தலையாயது, கொங்கரை அவன் வெற்றி கொண்ட கொற்றமே. கொங்கு நாட்டில் ஆனிரை ஒப்பும் தொழில் மேற்கொண்டவர்களாகிய அக்கொங்கர், ஆற்றல்மிக்க மறவர்களாகவும் விளங்கினர். கொங்குநாடு வன்னிலம் வாய்ந்த மேட்டுநிலமாதலின், ஆங்கு, ஆனிரைக்கு வேண்டும் நீர்தரும், நீர்த்தேக்கங்களைக் காண்பது இயலாது. அதனல், கொங்கர், கோடாரி போலும் இரும்புக் கருவிகளைக்கொண்டு, அம்மலைநிலத்தையும் உடைத்து, ஆழம் மிக்க கிணறுகள் பலவற்றை ஆங்காங்கே தோண்டி வைத்திருப்பர்; அவ்வாறு அரும்பாடுபட்டுத் தோண்டிய அக்கிணறுகளிலும், தண்ணிர் பெருக வாராது. மாருக, சிறிது சிறிதாகவே கசிந்து தேங்கிக் கிடக்கும் அந்நீரைப், பெரிய பெரிய குடங்களை இட்டு, முகப்பது இயலாது ஆதலாலும், ஒருகால் முகப்பது இயலுமா. யினும், அப்பெருங்குடங்களே அத்துனை ஆழத்திலிருந்து சேந்தி எடுப்பது இயலாது ஆதலாலல், நீண்ட கயறுகளில் சிறுசிறு முகவைகளைப் பிணித்து அந்நீரை மொண்டு மொண்டு ஊற்றுவர்; அவ்வாறு நீர் முகந்து ஊற்றும், அம் முகவைகளை, நீர் வேட்கை மிக்க ஆனிரைகள் கூட்டமாக மொய்த்துக்கொண்டு நீர் உண்டு செல்லும். ஆனிரை ஓம்பும் தொழில் அத்துனை அருமைப்பாடு உடையதாகவும், அத்தொழிலில் தளர்ச்சி காணு ஆற்றல் மறவராகிய அக்கொங்கரையும் வெற்றிகொண்டு, வீறுபடைத்த வேற்படைத் தலைவனாய் விளக்கம் .ெ ப ற் ரு ன் , பல்யானைச்செல்கெழு. குட்டுவன்.

பல்யானைச்செல்கெழுகுட்டுவனைப் பணியாது, பகைகொண்டு வாழ்ந்தார்கள், யாரோ சில குறும்பர்கள். அவர்கள் அவ்வாறு தன்னை எதிர்த்து நிற்பதற்கு யாது காரணம் என ஆராய்ந்து நோக்கியக்கால், அவர்பால், அகப்பா எனப்பெயர்

44.

44

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/54&oldid=1293683" இலிருந்து மீள்விக்கப்பட்டது