பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதை முற்றி வளத்து. இமைப்பொழுதில் அழித்து உட் புகுந்து தனதாக்கிக் கொண்டான். அவ்வெற்றிக்கு அறிகுறி. யாக, அவன் அன்று அணிந்த, உழிஞை மலர்மாலை, இன்றும் தன்பொன்னிறம் காட்டி மணவீசக் கண்டு, மகிழ்ந்தார் புலவர் பாலக்கெளதமர்ை.

அகப்பா அரண் வீழ்ந்ததும், பல்யானைக் செல்கெழு. குட்டுவன் சினமும் படையும், அவ்வரண்பெற்ற செருக்கால் பகைத்த பகைவர்நாட்டின் மீது பாய்ந்தன. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பகைவர், பணியாது வாழ்ந்தமைக்கு, அகப்பா அரண் மட்டுமே காரணமாகிவிடாது; அவர் நாட்டு, வற்ரு வளமும் அதற்குக் காரணமாம். அப்பகைவர் நாடு அளந்தறியாப் பலவளம் பெற்ற பெருமையுடையது. அந்நாட்டில் நீர்வளக்குறைபாடு எ ன் று ம் நேர்ந்ததில்லை. ஆறுகள் கரைபுரண்டோட, நீர் நிலைகள் நிரம்பி வழிய, வாய்க்தால்களில் வெள்ளமெனப் பாய்ந்தோடும், நீர் ஆங்கங்குள்ள அணைகளையும், மதகுகளையும், மடைகளையும் உடைத்துவிட, அதை உழவர் பெருமக்களுக்கு அவ்வப்போது அறிவித்து, உடைப்பை அடைக்க அழைக்க எழுப்பும் பறையோசை, அந்நாட்டில் இரவு பகல் எப்போதும் ஓயாது ஒலித்துக் கொண்டேயிருக்கும். பேராறுகளில் புதுவெள்ளம் வருந்தோறும் நிகழும் விழாவில் கலந்து கொள்ளும் களிப்பு மிகுதியால், அந்நாட்டு மறவர், அம்பும் வில்லும் கொண்டு போர்ப்பயிற்சி பெறுவதையும் ஒரளவு ம ற ந் து போவர். வயல்கள் நிறைய விளைந்து, வற்ருப் பெருவளங்களை வாரிவாரிக் கொடுப்பதால், அம்மக்கள் அவ்வப்போது எடுக்கும் பெருவிழாக்காலத்து எழும் பேரொலி, அந்நகர் வீதிகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். .

அத்துன வளமும் சேரன் சீற்றம் கொண்டதும் சீரழிந்து போயின. அவன் படைபுக்கதும் பாழுற்றுப்போயின

46

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/56&oldid=1293687" இலிருந்து மீள்விக்கப்பட்டது