பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

15

20

25

30

35

கடலும், கானமும் பலபயம் உதவப். பிறர்பிறர் நலியாது, வேற்றுப் பொருள் வெஃகாது, மையில் அறிவினர் செவ்விதின் நடந்து, தம் அமர்துணைப் பிரியாது, பாத்து உண்டு, மாக்கள் முத்தயாக்கையொடு பிணி இன்று கழிய, ஊழி உய்த்த உரவோர் உம்பல்! பொன்செய் கணிச்சித் திண்பிணி உடைத்துச் சிரறுசில ஊறிய நீர்வாய்ப் பத்தல் கயிறு குறு முகவை முயின மொய்க்கும் ஆககெழு கொங்கர் நாடு அகப்படுத்த வேல்கெழுதான்ே வெருவரு தோன்றல்! உளைப் பொலிந்த மா, இழைப் பொலிந்த களிறு,

வம்பு பரந்த தேர் அமர்க்கு எதிர்த்த புகல் மறவரொடு துஞ்சுமரம் துவன்றிய, மலர் அகன் பறந்தலை, ஒங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த வில்லிசை மாட்டிய விழுச்சீர் ஜயவிக், கடிமிளைக், குண்டு கிடங்கின், நெடுமதில், நிரைப் பதனத்து அண்ணலம் பெருங்கோட்டு அகப்பா எறிந்த பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ! போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும் நீர்த்தரு பூசலின் அழிக்குநரும், ஒலித்தலை விழவின் மலியும் யாணர் நாடுகெழு தண்பனை சீறினை ஆதலின், குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப் பாய் இருள் அகற்றும் பயங்கெழு பண்பின் ஞாயிறு கோடா நண்பகல் அமையத்துக் கவலை வெண்நரி கூடமுறை பயிற்றிக்

48

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/58&oldid=1293689" இலிருந்து மீள்விக்கப்பட்டது