பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழல்கண் கூனாணிக குழறுகுரல் பாணிக், கருங்கண் பேய் மகள் வழங்கும் பெரும்பாழ் ஆகும்மன் அளியதாமே!

துறை : வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகு, சொற்சீர்வண்ணங்கள் தூக்கு செந்துக்கும், வஞ்சித்துக்கும். பெயர் : கயிறுகுறு முகவை

இகந்து, புரிந்து, ந லி ய து, வெஃகாது, நடந்து, பிரியாது, உண்டு, உய்த்த உரவோர் உம்பல்! (1-11) கொங்கர் நாடு அகப்படுத்த தோன்றல் (12-16) மறவரொடு மரம், பறந்தலை, வாயில், விசை, ஐயவி, மிளை, கிடங்கு, மதில் பதணங்களையுடைய அகப்பா எறிந்த குடடுவ பனை சீறினையாதலின், பாழகும்மன், அளிய எனக் கொண்டு முடிக்க.

சின்னே காமம் கழிகண்ணுேட்டம் - மிக்க சினமும், மிக்க காமமும், மிக்க கண்ணுேட்டமும். அச்சம் பொய்ச்சொல் அன்புமிக உடைமை - அச்சமும் பொய்யும், அளவிறந்த அன்புடைமையும். தெறல்கடுமையொடு பிறவும் = கைஇகந்த தண்டமும், இவை போல்வன பிறவுமாகிய, இவ்வுலகத்துஉலகில். அறம் தெரி திகிரிக்கு - அறம் அறிந்து நடாத்தும் அரசியல் முறைக்கு வழியடை ஆகும் = இடையீடு செய்யும். திதுசேண் இகந்து = தீங்குகளைத் தம்நாட்டின் எல்லைக்கும் அப்பால் துரத்திவிட்டு. நன்று மிகப்புரிந்து நல்லறச்செயல் களேயே மிகுதியாகச் செய்து. கடலும் கானமும் பலபயம் உதவ = கடலும் காடும் போலும் நால்வேறு நிலங்களும் பற்பல பயன்களை அளிக்கவும். மாக்கள்- தம்நாட்டு மக்கள். பிறர் பிறர் நலியாது = ஒருவரை ஒருவர் துன்புறுத்தாதும். வேற்றுப் பொருள் வெஃகாது பிறர் பொருள்பால் வேட்கை

-4- 49.

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/59&oldid=1293690" இலிருந்து மீள்விக்கப்பட்டது