பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ததைந்த காஞ்சி

பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பேராற்றலையும், பெருங்கொடைப் பண்பையும் பலரும் பாராட்டக் கேட்டு, அவனைப் பார்த்துப் பாராட்ட வேண்டும் என்ற வேட்கை உந்த, அவன் நாடு நோக்கிப் புறப்பட்டார் புலவர் பாலைக்கெளதமஞர். காடுகளையும் மலைகளையும் கடந்து சேரநாடு நோக்கிச் செல்லும் புலவர், இடைவழியில் உள்ளதொரு நாட்டுள், புகுந்து போகவேண்டி நேர்ந்தது. அந்நாட்டைப் புலவர் பண்டே அறிந்திருத்தார்.

எப்போது பார்க்கினும், கிளி முதலாம் பறவைக்கூட்டம் ஒழிவற அமர்ந்திருப்பதால், ஓவெனும் இனிய ஒலி ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும், மருதம் முதலாம் வகைவகையான மரங்கள், வரிசை வரிசையாக வளர்த்திருக்கும் அப்பெரு நாட்டில், மணல் பரந்த பெரிய நீர்த்துறைகளில், இளம் மகளிர் கூட்டத்தால், மலரும் தளிரும் பறிக்கப்படுதலால், சிதைவுண்டு தாழ்ந்த கிளைகளையுடைய காஞ்சி மரமும் முருக்க மரமும் நிற்கும் அடைகரை, அம்முருக்கின் செந்நிறமலர்கள் உதிரப்பெற்று, நெருப்பு மலைபோல் காட்சி அளிக்க, ஆங்கு, வெண்சங்குகளும் செங்கால் நாரைகளும் இரைதேர்ந்துண்டு மகிழ்ந்து உலாவரும். அவ்விடங்களுக்கு அணித்தாகக், கழனிகளுக்கு வேண்டும் தண்ணீரைத் தேக்கிவைத்துத் தருவதால், வ ய ல் களி ன் வாயில் என மதிக்கத்தக்க .ெ ப ய் ைக ைய ச் சார்ந்துகிடக்கும் விளைநிலங்களில், செந்தழல் நிகர்க்கும் செந்தாமரை மலர்களும், விளையாட்டு மகளிர் கொய்யாது விட்டமையால் மலர்ந்து மணம் வீசா நிற்கும். ஆம்பல் மலர்களும் நிறைந்து கிடக்கும் இவை

53

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/63&oldid=1293693" இலிருந்து மீள்விக்கப்பட்டது