பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிழ்த்துத் தத்தம் இசைக்கருவிகளை ஏந்தி இலக்கியவாறே, அப்பேரூர்ப் பெருந்தெருக்களில் புகுந்து, வேந்தன் விழுப்புகழ் விளங்கப்பாடிச் செல்வாராயினர். அ வ ர் க ளே ப் பின் தொடர்ந்தார் புலவரும். ஒவ்வொரு தெருவாகப் பாடிக் கொண்டே, அக்கூட்டம், இறுதியில் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் வீற்றிருக்கும் பெருங்கோயில் முற்றத்தை அடைந்தது. அவர் பாடல் கேட்டுப் புறம்போந்து, அவர் ஆடல் கண்டு மகிழ்ந்த 'அக்காவலன், அவ்விரவலர் கூட்டம் உள்ளம் நிறைந்து உவந்து கூத்தாடுமாறு, பெருஞ்சோறு படைந்ததோடு அமையாது அரிய பெரிய பொன்னணிகள் எண்ணிலாதவற்றை எடுத்து எடுத்துக் கொடுத்தான்்.

கோடையால் வளம் இழந்து, நாட்டுப்பண்டாராம் வறண்டிருக்கும் அந் நிலையிலும் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பரிசிலர்க்குப் பெருங்கொடை அ ளி ப் ப து எ வ் வா ேரு? அப்பெருநிதியை அவன் யாண்டுப் பெற்றனனே? என்று எண்ணமிட்டவாறே, பல்யானைச் செல்கெழுகுட்டுவன் வீற்றிருக்கும் திசையை நோக்கியபுலவர், ஆங்கு அவன் இருமருங்கிலும் அணிவகுத்து நிற்கும் நாற் படைநிலையினைக் கண்ணுற்ருர், எத்துணைப் பெரும் படை களையும் எளிதில் அழிக்கவல்ல பேராற்றல் வாய்ந்தது அப் படை என்பதை அதன் தோற்றமும் காட்டிற்ருகப், பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பொருள் வளத்திற்காம் காரணம் புலவர்க்கு எளிதில் புரிந்து விட்டது. அப்படைத் துணையால் பகைநாடுகளையழித்துக் கைப்பற்றிக் கொணரும் பொருள் வளத்தால் அவன் கோயில் பண்டாரம் நிறைந்து வழிவதனாலேயே, அவனுல் வரையாது வழங்க முடிகிறது என உணர்ந்து, அந்நாற்படைகளையும், அப்படைகளைப் பணி கொண்டு புகழ்பெருக்கும் பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் பேராற்றலையும் புகழ்ந்து பாடினர். . - .

.56

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/66&oldid=1293696" இலிருந்து மீள்விக்கப்பட்டது