பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இப்பாட்டில், மகளிர் மலர்கொய்ய மாண்புமிகும். காஞ்சி மரத்தை, அம்மகளிரால் சிதைவுற்றுச் சீரழிந்தது என்று கூறிய நயம் விளங்க வந்த ததைந்த காஞ்சி என்ற தொடர் பேரின்பம் தருவல் கண்டு, அத்தொடரால் பெயர் சூட்டி யுள்ளார்கள். 2 . 'அலந்தலை உன்னத்து அங்கவடு பொருந்திச்

சிதடி கரையப், பெருவறங் கூர்ந்து நிலம் பைதற்ற புலம்கெடு காலையும் வாங்குபு தகைத்த கலப்பையர், ஆங்கண் 5 மன்றம் போந்து மறுகு சிறைபாடும்

வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப், பொன்செய் புனை இழை ஒளிப்பப், பெரிது உவந்து நெஞ்சுமலி உவகையர் உண்டு மலிந்து ஆடச், சிறு மகிழானும் பெருங்கலம் வீசும் 10 போர் அடுதான்ப் பொலந்தார்க் குட்டுவ!

நின் நயந்து வருவேம் கண்டனம்; புல்மிக்கு வழங்குநர் அற்றென மருங்குகெடத் தூர்ந்து பெருங்கவின் அழிந்த ஆற்ற, ஏறுபுணர்ந்து அண்ணல் மரைஆ அமர்ந்து இனிது உறையும் 15 விண்உயர் வைப்பின காடாயின; நின்

மைந்துமலி பெரும், புகழ் அறியார் மலைந்த போர் எதிர் வேந்தர்; தார் அழிந்து ஒராலின் மருது இமிழ்ந்து ஓங்கிய நனிஇரும் பரப்பின் மணல்மலி பெருந்துறைத் ததைந்த காஞ்சியொடு 20 முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை

நந்து நாரையொடு செவ்வரி உகளும் கழனி வாயில் பழனப் படப்பை

அழல் மருள் பூவின் தாமரை, வளைமகள் குறுஅது மலர்ந்ந ஆம்பல் 25 அறுஅ யாணர் அவர் அகன்தலை நாடே’’,

57

57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/67&oldid=1293697" இலிருந்து மீள்விக்கப்பட்டது