பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்படைகளையும். பொலந்தார்=பொன்னல் செய்த மாலையினையும் உடைய. குட்டுவ = பல்யானைச் செல்கெழுகுட்டுவனே! நின் மைந்துமலி பெரும்புகழ் அறியார் = நின் ஆண்மையால் பெருகும் புகழ் நிலையினை அறியாது. போர் எதிர் வேந்தர் = உன்னேடு போரிட முன்வந்த வேந்தர்கள். தார் அழிந்த ஒராலின்=உன் தூசிந்படைக்கே தோற்று ஓடி விட்டமையால். மருது இமிழ்ந்து ஓங்கிய = மருத மரங்கள் தம்பால் இறைகொள்ளும் புள்ளினங்கள் எழுப்பும் ஆரவாரம் மிக ஓங்கி நிற்கும். நளி இரும் பரப்பின் = நனிமிகப்பரந்த, மணல் மலி பெருங்துறை = மணல் மிக்க பெரியதுறைக்கண். ததைந்த காஞ்சியொடு = மலர் கொய்து சிதைவுற்று காஞ்சி மரங்களோடு. முருக்கு தாழ்பு எழிலிய = முருக்க மரங்களும் தாழ வளர்ந்து அழகுசெய்த நெருப்பு உறழ் அடைகரை = முருக்கின் செந்நிறமலர்கள் உதிர்ந்து கிடப்பதால் நெருப்பு மலையினை நிகர்க்கும் அடைகரையில். நந்து நாரையொடு செவ்வரி உகளும்= சங்குகளோடும், நாரைகளோடும் சிவந்த வரிகளையுடைய நாரையினப்பறவைகளும் உலாவித்திரியும். கழனிவாயில் பழனப்படப்பை = கழனிகளுக்கு வாயில்களாக விளங்கும் பொய்கைகளைச் சார்ந்த விளைநிலத்தில், அழல் மருள் பூவின் தாமரை = செந்தழல் போலும் பூக்களைக் கொண்ட தாமரை கொடிகளும். வளைமகள் குரூது மலர்ந்த ஆம்பல் = வளையணிந்த இளம் மகளிர் பறிக்காமையால் மலர் காட்டும் ஆம்பல் கொடிகளும். அறுஅ யாணர் = அற்றுப் போகாமைக்குக் காரணமான புதுவருவாய்மிக்க. அவர் அகன்தலைநாடு = அப்பகைவரின் பரந்து அகன்ற பெரிய நாடுகள். வழங்குநர் அற்றென = வருவோரும் போவோரு மாகிய மக்கள் வழங்குதல் அற்றுவிட்டபடியால். புல்மிக்கு = புல் நிறைந்து. மருங்கு கெடத்துணர்ந்து = வெற்றிடம் சிறிதும் இல்லாதவாறு முட்கொடிகளால் தூர்ந்து. பெருங் கவின் இழந்த ஆற்ற = தம் பண்டைப் பேரழகை இழந்து

59

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/69&oldid=1293699" இலிருந்து மீள்விக்கப்பட்டது