பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கத் தவறிவிட்டார்கள் விழிப்புணர்வு அற்ற சிலர் என்ருலும், நம் மூதாதையருள் விழிப்புணர்வோடு இருந்தவர்கள், அழிந்தனபோக அழியா திருந்த அப்பழம் பாக்களை எல்லாம், அரிதின்முயன்று தேடிக் கொண்டார்கள்.

அவ்வாறு தேடிப் பெற்ற அப்பாக்களை ஊன்றிப் பயின்ற புலமைசால் பெரியார்கள் பலரும் ஒன்று கூடி இருந்து, இப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள்வளம், அப்பாக்களின் அடி அளவு ஆகியவற்றை, அளவுகோலாகக் கொண்டு, அப்பாக்களேயெல்லாம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்ற தலைப்புக்களில் தொகுத்து நமக்கு அ வி த் து ச் சென்றனர். அவ்வாறு தொகுக்கப் பெற்ற தொகை நூல்களில், இரண்டாவது வரிசையில் நிற்பதான் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றிருக்கும் பாக்களின் நலங்களை, நம்கால மக்களும் உணர்ந்து மகிழ வேண்டும் என்ற அவாவில்ை உந்தப் பட்ட காரணத்தால் அவ்வரிசையுள், மு த ற் க ண் வைத்துப் பெருமை செய்யப் பெற்றதான் நற்றினேயினே, 'நற்றிணை விருந்து’’ என்ற தலைப்பிலும், இரண்டாம் நிலைபெற்ற தாயினும், 'நல்ல குறுந்தொகை’’ எனச்சிறக்கப் பெற்றதான் குறுந்தொகையினைக், 'குறுந்தொகைக் கோவை’ என்ற தலைப்பிலும், ஆருவது இடம் அளிக்கப் பெற்றதாயினும்" 'கற்றறிந்தார் .ே பா ற் று ம் கலி' என்ற சிறப்பினைப் பெற்றதான் கலித்தொகையினைப், பாலைச் செல்வி’, 'குறிஞ்சிக்குமரி', 'மருத நில மங்கை', 'முல்லைக்கொடி’, 'நெற்தற் கன்னி’ என்ற ஐந்து தலைப்புக்களிலும், முப்பது ஆண்டுகளுக்கு முன்பே விளக்கி வெளியிட்டேன்.

பழந்தமிழர் தொகுத்தளித்த வரிசையிலேயே அவ்வெட்டுத் தொகை நூல் விளக்கங்களையும் அளிக்க வேண்டும் என்

IV

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/8&oldid=704531" இலிருந்து மீள்விக்கப்பட்டது