பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடித்துக்காட்டுவதுபோலும் அழகிய பாட்டை, அரசன்கேட்ட அப்போதே பாடி, அவனையும் அவனைச் சூழ அமர்ந்திருக்கும் அரசியல் அலுவலரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கப் பண்ணிப் பேரின்பம் கண்டார். -

காட்டுத் தீயால் வெந்தும், நி ழ ல் த ரு ம் மரங்களை இழந்தும், தன்னெனக் குளிர்ந்த வெண்மணல் விரவப் பெருமலும் வழிச்செல்வோர் கால்களை வருத்துவதோடு, ஆறலை கள்வர் உடைமையால் வழிச்செல்வோரின் உடலையும் உள்ளத்தையும் ஒருசேர வருத்தம் காட்டு வழியைக் கான் உணங்கு கடுநெறி என்று பெயர் சூட்டி அழைத்த பெருமையால், அப்பெயரே பெறுவதாயிற்று.

25. 'மா ஆடியபுலம் நாஞ்சில் ஆடா;

கடாஅம் செண்ணிய கடுங்கண் யானை இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா; நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி,

5 நீ உடன்ருேர் மன் எயில் தோட்டி வையா;

- கடுங்கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்துப்

பசும்பிசிக் ஒள் அழல் ஆடிய மருங்கின், ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடுநெறி முனை அகன் பெரும் பாழாக மண்ணிய

10 உரும் உறழ்பு இரங்கும் முரசின், பெருமலை

வரை இழி அருவயின் ஒளிறுகொடி துடங்கக் கடும்பரிக் கழற்சிறகு அகைப்ப. நீ . . நெடுந்தேர் ஒட்டிய பிறர் அகன்தலை நாடே”. துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு வண்ணம்: ஒழுகு. சொற்சீர்வண்ணங்கள் தூக்கு: செந்தூக்கும், வஞ்சித்துாக்கும், பெயர்: கான் உணங்கு கடுநெறி

72

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/82&oldid=1293714" இலிருந்து மீள்விக்கப்பட்டது