பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காடுறு கடுநெறி

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் படைப் பெருமையை யும், அப்படையால் நலிவுற்ற அவன் பகை நாட்டுப் பாழுற்ற நிலையையும் கூறும் தம் பாட்டைக் கேட்டு மகிழ்ந்து, தம்பால் பெருமதிப்புற்றிருக்கும் நிலைநோக்கி, அவன் படைச் செருக்கால் பிற நாட்டவர்க்கு அளிக்கும் பெருந்துன்பத்தை யும் அவனுக்கு எடுத்துக்காட்டி, அவன் போர் வெறியைப் போக்க விரும்பினர் புலவர் மாலைக் கெளதமர்ை.

அவ்விருப்பம் வரப்பெற்ற புலவர் அரசனை அணுகி, 'பல்யானைச் செல்கெழுகுட்டுவ! உன் படை வீரரின் பேராற்றலையும் பெருமையையும் பாருலகோர் அனைவரும் அறிவர். அனைத்துயிர்களையும் அழிப்பதல்லது, தான்் அழிவுற்றுப் போகா ஆற்றல் வாய்ந்த கூற்றுவன் அனைய ஆற்றல் படைத்தவர் உன் படைவீரர். அவர்கள் சினந்து புகுந்த பேரூர்கள், முருகவேள் சினந்து புக்க சூரன்மூதூர், பீடும் பெருமையும் கெட்டுப் பெரும்பாழ் உற்றதுபோல் உருக் குலைந்து போகும். அத்துணை ஆற்றல் வாய்ந்த அவர்கள், தம் ஆண்மையால் அறிவிழந்து, அறநெறி மறந்து அழிபோர் புரியும் இழிவுடையராகி விட்டனர். கைப்படை இழந்துவிட்ட காளையர், காதல் நெறிகண்டு கற்பு நெறிகாக்கும் காரிகையர் போலும், பொரற்குரியரல்லாதார் மாட்டு மறந்தும் படை தொடாத் தறுகண்மை வாய்ந்தவர். அப்படை புகுந்த உன் பகைவர் நாடுகளில், பேரூர்களெல்லாம் வாழ்வோர் போகிய பாழ் ஊர்களாகி விடவே, அவ்விடத்து மனைகளெல்லாம், பீர்க்கும் பிறவும் படர்ந்த வேலிகளையே யுடையவாகி மாண்பிழந்து ேபா யி ன. அந்நாட்டுப் பெருவழிகள்,

75

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/85&oldid=1293718" இலிருந்து மீள்விக்கப்பட்டது