பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருஞ்சி முட்செடிகள் காடுபோல் வளர்ந்து வழக்கற்றுப் போயின,

'வேந்தே! வாழிடங்களும் வழிகளும் இவ்வாறு வனப். பிழந்துபோகக் கண்டும், அந்நாட்டு மக்கள், இவற்றிற். கெல்லாம், தங்கள் நாட்டு அரசனின் ஆற்றல் இன்மையும், உன்படையாளரின்ஆற்றல் உண்மையுமே காரணங்களாம் என்பதறிந்து, தங்கள் அரசன் மாட்டு அவலமோ, உன் மாட்டு ஆறுச்சினமோ கொண்டு அது தீர்க்கும் வழிவகை வகுக்க முயலாது, பருவந்தொறும் பொய்யாது பெய்யும் மழை பொய்த்துப் போகவே, நிலமும் நாடும் வெம்மை மிகுந்து வளம் இழந்து போயின. நம் அல்லற் காலத்தின் விளைவாம் இதுகுறித்து குறித்து யாம் என் செய்ய வல்லேம்? தாம் எத்துணைதான்் முயன்ருலும், காலம், தன் கொடுமையைக் காட்டியே தீரும்’ என்று எண்ணி, அக்காலக் கொடுமை தீருவது எக்காலமோ? அதுகாறும் யாம் வாழ்வது எவ்வாருே? அந்தோ! யாம் என் செய்வேம்? அவலம்! அவலம்!! எனக் செயல் இழந்து சிந்தை நொந்து, கைபிசைந்து கலங்கி நிற்கும் சிறுமையுடையவராகி விட்டனர்”, என்று கூறி, அவன் வீரர் தம் ஆற்றலை விளங்கப் பாடிப் பாராட்டிப் பெருமை செய்தார்.

புலவர் பாராட்டிய படைப்பெருமை கேட்டு பெரும்.கிழ்ச்சி புற்ற பல்யானைச் செல்கெழுகுட்டுவன், அவ்வாறு பாராட்டிய புலவர்பால் பெருமதிப்புயுடையணுகி, அவர் மேலும் கூறுவன. வற்றைக் கருத்தோடு கேட்கும் பெருவேட்கையுடையயிைன்ை. அந்நிலையை எதிர் நோக்கியிருந்த புலவர் உடனே "வேந்தே! இன்று ஊக்கமும் உறமும் இழந்து, செய்வ. தறியாது சிந்தை கலங்கிச் சிறுமையுற்றுப்போன அந்நாட்ட வரையும், வளம் அழிந்து வனப்பிழந்து கிடக்கும் அவர்

76

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/86&oldid=1293719" இலிருந்து மீள்விக்கப்பட்டது