பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டையும் பண் டு காணும் பேறு பெற்றவர் எவரும், அக்காலை, அந்நாட்டவர்பால், பொருந்தியிருந்த அயரா முயற்சியும், அசைக்கலாகா உள்ளுரத்தையும், அவர்தம் உழைப்பால் உயர்ந்து, உலகு பாராட்டும் உயர்புகழ் பெற்று விளங்கிய அந்நாட்டு வளத்தையும் நினைத்து நினைத்து, அந்தோ அவர்க்கா இக்கதி; அவர் நாட்டிற்கா, இத்துணைப் பேரழிவு என விழி நீர்சேர, வெந்தழல் மெழுகென, நொந்து மனம் நெகிழ்வர். -

'பல்யானைச் செல்கெழுகுட்டுவ! அந்நாட்டுச் செல்வர்கள் ஊர்ந்து செல்லும் தேர்கள் ஓடுவதினலேயே அந்நாட்டு நஞ்செய்கள் எல்லாம் நிறை சேருகிவிடும். கோளுக்கிழங்கு தேடும் பன்றிக் கூட்டம் கிளறி விடுவதினலேயே, புன்செய்கள் எல்லாம் புழுதியாகிவிடும். அதனல், உழவர்கள் ஏர்கொண்டு உழவேண்டாமலே, உரம்மட்டும் இட்டு விதைத்து விடுவர். அத்துணைத் தொழில்வளம்மிக்கது அந்நாடு. கறவைகளைக் கணக்கின்றிப் பெற்றிருக்கும் அந்நாட்டுப் பேரூர் மனை ஒவ்வொன்றிலும், வி டி ய ற் ேபா தி ல், தயிர் கடைந்து வெண்ணெய் திரட்டும் மத்தொலி முழங்குமாதலின், அக்காலை அம்பேரூர் வீதிகளில், பாணர் முதலாம் இசைவாணர் எழுப்பும் இன்னிசை எதுவும் எவர் காதிலும் புகாது. அத்துனைப் பெருவளனைப் பார்த்து மகிழ்ந்த பல்லோருள் யானும் ஒருவன். அப்பண்டைப் பெருவளனைப் பார்த்து மகிழ்ந்தவர், அந்நாட்டின் இன்றைய பாழ்ப்பட்ட நிலையைப் பார்க்க நேர்ந்தால் அவர் நிலை என்னும்! அவர் உள்ளம் கொள்ளும் துன்பம் எத்துணைக் கொடிதாம்! அ ந் ேத r! அவர் நிலை நினைந்து நெகிழ்ந்து நெக்குருகி நிறைதுயா அடைகிறது என் நெஞ்சு' என்று கூறிப்புலம்பி, அந்நாட்டின் கொடுமை, அவன்கண்ணிலும் கருத்திலும் படுமாறு பண்ணிவிட்டார்.

77

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/87&oldid=1293720" இலிருந்து மீள்விக்கப்பட்டது