பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊரும் தேர்கள் செல்வதால் சேறுபட்ட வயல்களில், ஏர்கள் உழுழவேண்டுவது இல்லையாகும். களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா = கோரைக்கிழங்கு தேடும் பன்றிகள் கிளறியதால் புழுதிபட்ட கொல்லைகளில், கல ப் ைப க ள் தொழில்புரிய வேண்டுவது இல்லையாகும். மத்து உரறியமன மத்தொலி முழங்கும் மனைகளில். இன்னியம் இமிழா=இனிய இசையொலிகள் எழவேண்டுவது இல்லையாகும்; அல்லது இனிய இசையொலிகளைக் கேட்பது இயலாததாகும். பண்டு நற்கு அறியுநர் = அந்நாட்டின் பண் ை- ய இப்பெருவளத்தை நன்கு அறிந்திருந்தவர். கெழுவளம் நினைப்பின் = இன்று சீரழிந்து போன அச்சிறந்த வளப் பெருமையை நினைந்து பார்ப்பராயின். நோ கவரும்= மிகவும் மனம் நோகவேண்டிநேரும். யான்நோகு=அந்நாட்டின் நிலையும், அந்நாட்டின் அழிவுநிலை கண்டு கண்கலங்குவார் நிலையும் கண்டு யானும் வருந்துகின்றேன்.

இசைக்கு உருகா உயிரே இல்லை என்பர்; ஆனால் அந்த இசையும் ஒருசில இடங்களில், சில ஒலிகளுக்குத் தோற்றுப் போவது உண்டு. தம் மக்களின் மழலைமொழி கேட்டு மயங்குவார் காதுகளுக்குக் குழலும் யாழும் இன்பம் ஊட்டுவது இல்லை, "குழல் இனிது யாழ் இனிது என்பர். தம் மக்கள் ம ழ லை ச் .ெ ச ல் கேளாதவர்”, என்பர் திருவள்ளுவர். அதேபோல், ஒரு தொழிலில் ஒன்றிப்போன தொழிலாளியின் காதுகள், அத்தொழிற்சாலையில் எழும் ஒலி களில் இன்பம் காணுவது இல்லைபோல், அத்தகு தொழில் வளமனம் படைத்தவர் ஆயர் என்பதை விளக்க வந்த புலவர், பாணர் முதலாம் இசைவல்லுநர்கள், விடியற்போதில் ஆயர், பாடி வீதிகளில், தம் இசைத்திறம் எல்லாம் காட்டி ஏழிசை முழக்கினும், ஆயர், தம் இல்லத்தில் தயிர் கடையும் மத்தொலி எழுப்பும் ஒலி கேட்க மகிழ்வதுபோல், அவ்.

80

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/90&oldid=1293723" இலிருந்து மீள்விக்கப்பட்டது