பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. தொடர்ந்த രൂഖ്

பல்யானைச் செல்கெழுகுட்டுவன் பேணிப்பெருமை செய்ய, அரண்மனை விருந்தினராய் வீற்றிருந்த புலவர் பாலைக்கெளதமனர், ஒருநாள், அவன் நரளோலக்கச் சிறப்பைக் காண அ ர ச ைவ க் குச் சென்றிருந்தார். ஆங்கு அரசன் சினத்தால் சிவந்த கண்களுடையய்ை வீற்றிருக்கக் கண்டு அண்மையிற்சென்று, அவனுக்குச்சினம் வரப் பண்ணிய சிறுமதியாளன் யாவன் என வினவினர். தன் சினத்திற்காம் கார்ணம் இன்னது என்பதையும், அச்சினத்தைச் செந்தி மூட்டி வளர்த்தவன் இன்ன நாட்டினன் என்பதையும் எடுத்துக் கூறினன் மன்னவன்.

மன்னவன் கூறி ய அம்மதியிழந்தான்ையும், அவன் இருந்து ஆளும் நாட்டினையும் புலவர்பண்டே அறிந்திருந்தார். ஆள்வோன் அறிவின்மையால் அழியப் போகும் அந்நாட்டின் பெருவளக்காட்சி புலவர் கண்களில் நீர் கலங்கப்பண்ணி. விட்டது. சினத்தைக் கிளப்பியவன் செருக்கை அழிக்க வேண்டுவது அரசன் கடமையேயென்ருலும், அதனால் வளம் இழந்து நலிவுறப் போவது நாடும் நாட்டவருமே என்பதை எண்ணியதும், எவ்வாறேனும் அவ்வழிவு நிகழாவண்ணம் தடுத்து நிறுத்துவது இயலாதோ என்ற ஏக்கம் புலவர் உள்ளத்தில் இடம் பெற்றது. பல்யானைச் செல்கெழுகுட்டுவன் படைபுகுந்துவிட்டால், பகைநாட்டு வளம், முற்றும் பாழுற்றுப் போகும் என்பதையும், அவன் படையெடுக்கத் துணிந்து விட்டனுயின் அதைத் தடுத்து போக்குவது இயலாது என்பதையும் அறிவார் என்ருலும், தன்படையெடுப்பால் பாழுறப்போகும் அந்நாட்டின் பல்வளப் பெருமையை

82

82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/92&oldid=1293726" இலிருந்து மீள்விக்கப்பட்டது