பக்கம்:அடுநெய் ஆவுதி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறை : செந்துறைப் பாடாண் பாட்டு) வண்ணம்: ஒழுகு வண்ணம் துாக்கு: செந்துக்கு பெயர்: தொடர்ந்த குவளை

மடிவையரும், சென் னி கண்ணிகளையுடைய ஆர்கையரும் ஆகிய இயவர் வாழும் துறை நணிமருதம் ஏறி மகளிர் இசைப்பின், மயில் ஆலும், செருவில் உருளி மண்ட, துள்ளுபு துரப்ப சாகாட்டாளர் கம்பலை அல்லது பூசல் அறியா நன்னட்டுக் கவின் (2-16) நோக்கலின் சிதைந்தது, எனக் கூட்டிப் பொருள் கொள்க. -

தொடர்ந்த குவளை = இடையறவு இன்றித் தொடுக்கப் பெறும் குவளையின். து நெறி அடைச்சி = முழுமலரையும் சேர்த்து. அலர்ந்த ஆம்பல் அகமடிவையர் = அன்றலர்ந்த ஆம்பல் மலர்களை இடையே தொடுத்து ஆக்கிய தழையாடை உடையவரும், சுரி ய ல் அ ம் சென்னி = சுருண்ட அழகிய மயிரும். பூஞ்செய்கண்ணி = பூக்களால் ஆன கண்ணியும் உடையவரும். அ ரி ய ல் ஆ ர் ைக ய ர் = வடித்தெடுத்த கள்ளுண்டு களிப்பவரும் ஆகிய இனிது கூடு இயவர் இசை இனிது கூட இசைக்குப் இசைவாணர் வாழும். துறைநணி மருதம் ஏறி = நீர்த்துறைக்கு அணித்தாக உள்ள மருதமரத்தில் ஏறி. தெறுமார் = நெற்கதிர்களைத் தி ன் னு ம் பறவைகளை ஒட்டுவான் வேண்டி. எல்வளை மகளிர் = ஒளி வீசும் வளையணிந்த இளம் மகளிர். தெள்விளி இசைப்பின் == தெளிந்த தம் குரலை எடுத்து ஒலி எழுப்புவராயின், பழனக்காவில் வயலைச் சார்ந்திருக்கும் சோலைகளில், பசுமயில் ஆலும் =பசிய மயில்கள் தம் தோகை விரித்து ஆடிக்களிக்கும் இயல்புடையதும். பொய்கை வாயில் புனல்பொரு புதவின் = பொய்கையின் வாயிலிடத்தே அமைந்து புனலால்

86

86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அடுநெய்_ஆவுதி.pdf/96&oldid=1293732" இலிருந்து மீள்விக்கப்பட்டது