பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நீலங்கலந்த பச்சை நிறமுள்ளது. ஆனால், திறந்த கடலின் நீர் அடர்ந்த நீல நிறமுள்ளது. இதன் கரைகளில் பல துறைமுகங்கள் உள்ளன. இதன் கிளையே ஹாலந்தில் தென்கடலாக உள்ளது.

பால்டிக்கடல்

இதுவும் ஆழமற்றதே. இதன் பகுதிகள், உறையும். இதன் நீர் உப்பில்லாத நீரே. இதில் பெரிய ஆறுகள் கலக்கின்றன. ஆவியாதல் அளவும் குறைவு. ஆகவே, இதில் உப்பில்லை. இதில் காட், ஹெரிங் என்னும் மீன்கள் அதிகம் உள்ளன.

மையத்தரைக்கடல்

உலகிலேயே மிகப் பெரிய உள்நாட்டுக்கடல் இது. இதன் நீளம் 2,300 மைல். இதன் கரைகளில் பாதி ஐரோப்பாவிற்குரியது. அடுத்த பாதி சம அளவில் ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் உரியது.

மற்றக் கடல்களைக் காட்டிலும் இதில் வளைகுடாக்கள், விரிகுடாக்கள், தீவுகள் அதிகம். இது நிலம் நோக்கி ஆழச் செல்வது. இதன் அளவை ஒப்பு நோக்க, இதில் கலக்கும் ஆறுகள் குறைவு. வெப்பக் காற்றுகளால் நீர் ஆவியாதல் அதிகம். ஆகவே, இதன் நீர்களில் உப்பு அதிகம்.

ஆவியாதலால் அதிக நீர் இழக்கப்படுகிறது. இந்த இழப்பு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வரும் நீரோட்டத்தினால் சரி செய்யப்படுகிறது.