பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

இதில் ஒரு மலைத்தொடர் நீருக்குக் கீழ் உள்ளது. இது மையத்தரைக்கடலை இரு வடி நிலங்களாகப் (basins) பிரிக்கிறது.

இதன் வட பகுதியில் வளைகுடாக்கள் நிறைய உள்ளன. இதன் நீர்கள் அடர்ந்த நீலநிறமுள்ளது. இதில் அலை எழுச்சிகளை மிக அரிதாகப் பார்க்கலாம்.

சூயஸ் கால்வாய் வெட்டியபின் இந்தியாவிற்கும் அதற்குக் கிழக்கேயும் செல்லும் வழி குறுகியது. இதனால் மையத்தரைக் கடலின் வாணிபம் மீண்டும் ஓங்கிற்று. இதன் கரைகளில் பல சிறந்த துறைமுகங்கள் உள்ளன. உலகத் துணைக் கடல்களில் மிக்க வரலாற்றுச் சிறப்பு உடையது இது. மூவாயிரம் ஆண்டுகள் வரை எல்லா நாகரிகத்திற்கும் இது பெரும் துணைக் கடலாக இருந்தது.

நன்னம்பிக்கை முனை 1486-இல் கண்டுபிடிக்கப் பட்டது. மையத்தரைக் கடலில் வாணிபமும் நடை பெறுவது கைவிடப்பட்டது. சூயஸ் கால்வாய் 1869-இல் திறக்கப்பட்டது. வாணிபப் போக்கு வரவு பெருமளவுக்கு அதன் பழைய வழிகளில் நடை பெறலாயிற்று.

கருங்கடல்

இதில் மூடுபனி, புயல்கள் உண்டு. இது மாரிக் காலத்தில் உறையும். இது பால்டிக் கடலைவிடப் பெரியது. இதன் வடிநிலம் மையத்தரைக் கடல் வடி நிலத்தைவிட மும்மடங்கு பெரியது. இதில் பல