பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

நியூயார்க்கிலிருந்து பாரிசுக்கு விமானம் இறங்காமல் பறந்து செல்வதை ஊக்குவிக்க 5,000 பவுன் பரிசுத்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதற்கேற்ப 1927 இல் விமானம் ஒன்றில், கேப்டன் லிண்ட்பர்க் என்பார் 33½ மணி நேரத்தில் பாரிசுக்குப் பறந்து சென்றார். 1930 இல் பாரிசிலிருந்து நியூயார்க்கிற்கு மேஜர் கோஸ்டஸ் என்பவரும் லெப்டிணண்ட் பெல்லோனட் என்பவரும் பறந்து சென்றனர்.

1927 ஆம் ஆண்டிலிருந்து சரளமாக விமானங்கள் அட்லாண்டிக்கைக் கடக்கத் தொடங்கின. பல நாடுகளும் இதில் கலந்து கொண்டன.

1928 இல் முதல் கிழக்கு மேற்கு விமானப் பயணம் இனிது நடைபெற்றது. 1932 இல் அமீலியா ஏர்கர்ட் என்னும் முதல் பெண்மணி அட்லாண்டைக் கடந்து சென்றார். பயணத்திற்கு 13½ மணி நேரம் ஆயிற்று.

1937 இல் ஆய்வுநிலையில் ஆங்கில - அமெரிக்கப் போக்குவரத்துப் பயணங்கள் தொடங்கின, வானப் போக்குவரத்தும் முறையாக வளரலாயிற்று. நில நீர் விமானத் தளங்கள் கட்டப்பட்டன. வானிலை நிலையங்களும் அமைக்கப்பட்டன. விமானங்கள் கப்பல் போக்குவரத்துக்கும் உதவலாயின. போர்க் காலத்திலும் விமானங்கள் பறக்கலாயின.

1939 இல் பயண விமானம் ஒன்று அட்லாண்டிக்கைக் கடந்து சென்றது. இதில் விமானக்