பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4. அட்லாண்டிக் போர்
(1939-45)

கப்பல் போர்

அட்லாண்டிக் பெருங்கடல் இரண்டாம் உலகப் போரில் போர்க்களமாக அமைந்தது. அட்லாண்டிக் போர் என்பது இரண்டாம் உலகப் போரின் தொடர்பாக 1939-ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை நடை பெற்ற போராகும். இது உண்மையில் கப்பல் போரே.

நிலைகள்

இப்போர் எட்டு நிலைகளில் நடைபெற்ற போர். அந்நிலைகள் யாவை என்பதை இனிக் காண்போம்.

முதல் நிலை: இது 1939 செப்டம்பர் 13 முதல் 1940 ஜூன் வரை நீடித்தது. பிரிட்டிஷ் கப்பல்களும் ஜெர்மன் கப்பல்களும் குறைவாகவே மூழ்கின.

இரண்டாம் நிலை: இது 1940 ஜூன் முதல் 1941 மார்ச் வரை நீடித்தது. இப்பொழுது நிலை மோசமாயிற்று. ஜெர்மனியின் U-கப்பல்கள் எண்ணிக்கையில் அதிகமாகத் தாக்கின. பிரிட்டனிடமோ பாதுகாப்புக் கப்பல்கள் குறைவாக இருந்தன. தவிர, ஜெர்மனி நீர் மூழ்கிக் கப்பல்களோடு நீண்ட எல்லை விமானங்களையும் பயன்படுத்திற்று. பிரிட்டன் விமானப் பாதுகாப்பையும் உருவாக்