பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

வட அட்லாண்டிக்கில் ஜெர்மன் U-கப்பல்கள் அதிகம் மூழ்கின. ஜெர்மனிக்குத் தோல்வி மேலும் மேலும் ஏற்படும் சூழ் நிலைகள் உருவாயின. ஜெர்மனி புதுமுறைகளைக் கையாண்டு போரில் வெற்றி காணத் திட்டமிட்டது.

எட்டாம் நிலை: இது போரின் முடிவு நிலையாகும். இதில் ஜெர்மன் தோற்றது; பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகள் வெற்றி பெற்றன. ஜெர்மனியின் கடல் ஆதிக்கப் பேராசைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

ஜெர்மானியர் பெரிதும் தங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களை நம்பி இருந்தனர். ஆனால், பலத்த விமானத் தாக்குதலை அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை; தோல்வியை அரவணைக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது; ஆக, 1939-இல் தொடங்கிய அட்லாண்டிக் போர், 1945-இல் கடும் போராட்ட முறைகளுக்கிடையே ஒருவாறு முடிந்தது. பிரிட்டன் வெற்றி வாகை சூடியது; ஜெர்மன் தோற்றது.

போரின் தன்மை

உறுதியோடும் திறமையோடும் ஓயாமல் ஒழியாமல் இரு பக்கமும் போர் நீண்ட காலம் நடைபெற்றது. ஜெர்மன் நீர் மூழ்கிக் கப்பல்கள் 1939-45- ஆம் ஆண்டுகளுக்கிடையில் பிரிட்டிஷ் தீவுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைந்துள்ள செய்தித் தொடர்புகளைத் துண்டிக்க முயன்றன. இத்தொடர்புகள் பிரிட்டனுக்கு உயிர்ப்பானவை. இம் முயற்சியைக் குலைக்க, பிரிட்டன்