பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

 உள்ளிட்ட நட்பு நாடுகள் ஜெர்மனியோடு போரிட்டன.

நாடுகள்

இப்போரில் வலியத் தாக்கிய நாடு ஜெர்மனி ஆகும். ஜெர்மனிக்குத் துணையாக இத்தாலியும் நின்றது. எதிர்த்த நாடு பிரிட்டன் ஆகும். பிரிட்டனுக்குத் துணையாக அமெரிக்கா நின்றது. போர் இந்தியப் பெருங்கடலிலும், அட்லாண்டிக் பெருங்கடலிலும் பரவலாக நடைபெற்றது.

போர் முறைகள்

பிரிட்டன் கன்வாய் முறையைத் (convoy-system) தொடக்கத்திலிருந்தே பின்பற்றியது. கன்வாய் என்பது பாதுகாப்புடன் செல்லும் கப்பல் கூட்டத்தைக் குறிப்பதாகும். ஒரு கப்பல் கூட்டத்தில் 40 கப்பல்கள் இருக்கும். அவை வரிசையாக ஒன்றன் பின் ஒன்று செல்லும். இக்கப்பல்கள் தாக்குவதற்குப் பயன்பட்டன.

ஜெர்மனி உல்ப் பேக் முறையைக் (wolf pack system) கையாண்டது. இதில் பல U-கப்பல்கள் குறிப்பிட்ட தோற்றத்தில் அடங்கி இருக்கும். இக்கப்பல்கள் இரவில் தாக்கும். இம்முறையைத் தோற்கடிப்பது அவ்வளவு எளிதல்ல.

தவிர, விமானத் தாக்குதலும் இரு பக்கங்களிலும் சரமாரியாக நடைபெற்றது. போரின் இறுதிக்

2-599