பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5. அட்லாண்டிக் சாசனம்


அட்லாண்டிக் சாசனம் உருவானது இரண்டாம் உலகப் போரின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும், இது அமைதி நாடி விடப்பட்ட கூட்டு அறிக்கையாகும்; எட்டுக் குறிப்புக்கள் அடங்கியது. 1941-இல் பிரிட்டன் தலைமை அமைச்சர் சர்ச்சிலும், அமெரிக்கத் தலைவர் ரூஸ்வெல்ட்டும் சேர்ந்து இந்த அறிக்கையை விட்டனர். நான்கு நாள் மாநாட்டிற்குப் பின் இந்த அறிக்கை வெளியாயிற்று.

உலகின் எதிர்காலம் கருதித் தயாரிக்கப்பட்ட அறிக்கை இது. அவ்வகையில், இரு நாடுகளின் கொள்கைகளில் உள்ள பொது நெறி முறைகள் யாவை என்பதை அது விளக்குகிறது. அதன் எட்டுக் குறிப்புக்கள் அல்லது நெறி முறைகள் பின்வருமாறு :

நாட்டுச் சார்பாகவோ பிற நிலையிலோ இரு நாடுகளும் தங்கள் நலம் பேணுவதில்லை.

நாட்டு ஆட்சிக்குரிய மாற்றங்களை மக்கள் விருப்பத்துடன் செய்தல்.

மக்களின் உரிமைகளை மதிப்பது; அவர்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைப்பது; உரிமைகள் பறிக்கப்பட்ட நாடுகளுக்குத் தன்னாட்சியும் முழு ஆட்சி உரிமையும் அளித்தல் அல்லது பெறுமாறு செய்தல்.