பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


 செய்திகள் அனுப்பப்பட்டன. ஒரு நிமிடத்திற்கு 2,500 சொற்கள் அனுப்பப்பட்டன.

ஒரே சமயத்தில் பல செய்திகளை விரைவாகக் கடத்தும் முதல் கம்பி 1931-இல், அசோர்ஸ் வழியாக இங்கிலாந்துக்கும் நியூபவுண்ட்லாந்துக்கும் இடையே போடப்பட்டது.

1946-இல் 21 கம்பிகள் அட்லாண்டிக்கில் போடப்பட்டு இணைக்கப்பட்டன; செயல்படத் தொடங்கின.

தற்பொழுது ஆறு கம்பிகளைத் தவிர மற்ற எல்லாம் உயர்ந்த ஒரு நீர் மூழ்கு மலைத் தொடரில் போடப்பட்டுள்ளன. இத்தொடர் ஒரு சமவெளியே. இதற்குத் தொலைவரைச் சமவெளி என்று பெயர்.

முதல் கம்பியை இடும்பொழுதும் இச்சமவெளி கண்டு பிடிக்கப்பட்டது. இது தகுந்த மட்டமுடையது; 2 மைல் ஆழமுள்ளது. இதில் குழைவான சேறு உள்ளது. இச்சேற்றில் கம்பிகள் பதிந்து கிடக்கின்றன; பழுதுபார்க்க இங்கிருந்து எடுப்பது எளிது. இது குறுகிய எடைக் குறைவான கம்பிகளைப் பயன்படுத்த ஏதுவாக உள்ளது.

1929 அக்டோபர் 18- இல் கடலுக்குக்கீழ் ஏற்பட்ட நிலநடுக்கம் முக்கிய 12 கம்பிகளைத் துண்டித்தது. இதனால், செய்திப் போக்குவரத்து ஆறு வாரங்கள் வரை நடைபெற முடியவில்லை.