பக்கம்:அட்லாண்டிக் பெருங்கடல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9. அட்லாண்டிக் ஆராய்ச்சி

அட்லாண்டிக் கடலில் நடைபெற்ற ஆராய்ச்சியினால் பல புதிய உண்மைகள் வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு:

கனி வளம்

இக்கடலின் செங்களிமண்ணில் 220 டிரில்லியன் அலுமினியமும், 650 டிரில்லியன் டன் இரும்பும், 73 டிரில்லியன் டன் டிட்டானியமும், 15 டிரில்லியன் டன் வெனாடியம், கோபால்ட், நிக்கல், செம்பு, காரியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன.

நிலக் காந்தப்புலம்

இக்கடலின் மேற்பரப்பு நிலக் காந்தப்புலத்தை அறிய ஜாரியா (Zarya) என்னும் கப்பல் பயன்பட்டது. நார்வே கடற்கரை, அட்லாண்டிக்கின் வட தென் பகுதிகள் ஆகியவை அருகே காந்தப் பிறழ்ச்சிகள் காணப்படுகின்றன. அவை அட்லாண்டிக் கடல் தரையின் அமைப்பு விந்தைகளுக்குக் காரணமாய் உள்ளன. எனவே, மேற்கூறிய கப்பல் ஆராய்ச்சி நடைபெற்றது.

குடைவும் எரிமலையும்

இக்கடலில் உள்ள பெரிய குடைவுகளில் (Canyons) பிரான்சும், அமெரிக்காவும் ஆராய்ச்சி நடத்தியுள்ளன. அட்லாண்டிக் கடலின் இரு பக்கங்களையும் தள்ளும் எரிமலைச் செயலுக்குச் சான்று தேடவே ஆராய்ச்சி நடைபெற்றது.

தென் அட்லாண்டிக் கடலில் நன்னம்பிக்கை முனைக்கு 550 மைல் தொலைவில் ஒரு பெரிய மலை