பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

97



ஒழுக்கம் ஞானம் குடிமை செம்மை இங்கே கூர்ந்து உணர வந்தன. கற்றவன் கற்றபடி நடக்க வில்லையானால் அவன் கல்வி புல்லிதாய்ப் பொலிவிழந்து போகிறது. கல்வியறிவின் பயன் நல்ல சீலமே; அந்தப் பயன் படிந்து வரும் அளவே அது வியனாய் உயர்ந்து எங்கும் விளங்கி வருகிறது.

ஞானம் என்பது உண்மையை உள்ள படி உணர்தல். உள்ளது தெளிவது உய்தியுறுவது.

சீவான்மா வுக்கும் பரமான்மா வுக்கும் உள்ள உறவுரிமைகளைத் தெளிவாகத் தெரிவதும், பிறவி நீங்கிப் பேரின்பம் பெறுவதும், இந்த ஞான ஒளியினாலேயாம். எங்கே ஞான ஒளி இல்லையோ அங்கே ஈன இருளே நிறைந்திருக்கும். இந்தத் திவ்விய ஒளியை அணு அளவு எய்தினும் அவன் தெய்வ மனிதனாகிறான். தேவ தேவனை அடைகிறான்.

சிறந்த குலமகனுக்கு அழகு தான் பிறந்த குடியை உலகம் புகழ்ந்து வரும்படி செய்து அருளுவதேயாம். உயர்ந்த குண நீர்மைகளை உரிமையாக உடையவனே இத்தகைய உ த் த ம நிலையை எத்தகையோரும் ஏத்தி வரப் பெறுகின்றான்.

என்புகழ் கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான்
தன்புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்கு மாபோல்
மன்புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்கள் எல்லாம் உன்புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர் குணத்து உரவுத்

(இராமாயணம்) [தோளாய்!


பரதனைக் குகன் இவ்வாறு புகழ்ந்திருக்கிறான்.

தான் பிறந்த குடி யோடு தன் குலத்தையும் இவன் 13