பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

133


52.பேசாத மோனம் பெரியஅணி; யாரையும்
   ஏசா தமைதல் இனியஅணி; - மாசேதும்
   உள்ளம் உறாமை உயிரணி; யாருக்கும்

   கள்ளம் உறாமை அணி.
(௫உ)
இ-ள்


மவுனம் மனிதனுக்கு அதிசய அழகு; எவரையும் இகழ்ந்து பேசாமல் இருப்பது வாய்க்கு உயர்ந்த அழகு; உள்ளத்தில் மாசு யாதும் மருவாமல் பாதுகாப்பது உயிர்க்கு இனிய அழகு; கள்ளம் இல்லாமை எல்லார்க்கும் நல்ல அழகு என்க.


சொல்லும் செயலும் மனித வாழ்வில் இயல்பா இயங்கி வருகின்றன. உலக நிலையில் பலன்கள் விளைந்து வர இவை கிளர்ந்துவரின் நலமாய்ச் சிறந்து வருகின்றன. பயன் இல்லையேல் வீண்சொல் விண் செயல் என வெறுத்து இகழப் படுகின்றன.


ஆன்மானந்தத்தை அடைய நேர்ந்த ஞானிகளிடம் பேச்சும் செயலும் ஒடுங்கி விடுகின்றன.

மோனம் என்பது ஞான வரம்பு. (ஒளவையார்)


ஞானத்துக்கும் மோனத்துக்கும் உள்ள உறவுரிமைகளை இதனால் உணர்ந்து கொள்கிறோம். பேச நேர்ந்தால் பிழை ஏதும் நேராமல் பேசி வருவது நலம். பிறரை இகழ்ந்து பேச நேர்ந்தவன் தனக்கு உள்ளேயே எள்ளி இகழப்படுகின்றான்.

ஒருவன் இசை பெற்று வர வேண்டுமானால் எவரையும் யாதும் அவன் வசை கூற லாகாது. வார்த்தை நலமாய் வரின் மனிதன் நல்லவனாய்