பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

 அ ணி ய று ப து


அஞ்சும் துறவாத் துறந்தசிவ
யோகி ஒருவன் அடியிணையில்
துஞ்சும் திருமால் முதல் அமரர்
உள்ளம்; அவனைத் துதித்திறைஞ்சாது
எஞ்சும் தவமா முனிவர்இலை
என நான் மறையும் இயம்புமால். (3)

(பிரபுலிங்க லீலை 24)

உயிரையும் உயிர்க்கு உயிராயுள்ள பரமனையும் அவனைக் கண்டுகளித்து வருகிற தத்துவஞானிகளையும் உத்தம யோகிகளையும் இவை வித்தக விசித்திரமா விளக்கியுள்ளன. பாசுரங்களைப் பலமுறையும் ஓதி யுணர்ந்து உண்மை நிலைகளை நுண்மையாய் ஒர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும்.

மெய்யுணர்வு மனிதனிடம் தெளிவாக விளங்கியபொழுது அவன் தெய்வ ஒளியாய்த் திகழ்கிறான். உய்தி பெற்று உயர்கிறான்.

பிரஹ்ம வேதந மாத்ரேண பிரஹ்மாப்நோத்யேவ
மாநவ: (கடருத்ரம்)

“பிரமஞானம் தோன்றிய அளவு ம னி த ன் பிரமத்தையே அடைகிறான்' என்னும் இது ஈங்கு உன்னி உணர்ந்து கொள்ள வுரியது.

தன்னை உணர்ந்து தன் உயிர் தான் அறப் பெற்றவன் தனி முதல் தலைவன் ஆகின்றான். ஆகவே மன்னுயிரெல்லாம் அவனை உவந்து தொ ழு து வருகிறது. உரிய இன்பப் பேறு தெரிய வந்தது.