பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

11


படாமல் நித்திய சிரஞ்சீவியாய்ச் செவ்வேளை எவ்வேளையும் அன்புடன் தாங்கி இன்பம் மிகப் பெற்றுள்ளான். ஆய அப்பேறு அறிய வந்தது.

தீயவை புரிந்தார் ஏனும்
குமரவேள் திருமுன் உற்றால்
தூயவர் ஆகி மேலைத்
தொல்கதி அடைவர் என்கை
ஆயவும் வேண்டும் கொல்லோ?
அடுசமர் இந்நாட் செய்த
மாயையின் மகனும் அன்றோ
வரம்பிலா அருள்பெற் றுய்ந்தான்.

(1)

சீர்திகழ் குமர மூர்த்தி
செறிவிழி கொண்ட தொல்லை
ஊர்தியின் இருக்கை நீங்கி
உணர்வுகொண்டு ஒழுகி நின்ற
சூர்திகழ் மஞ்ஞை ஏறிச்
சுமக்குதி எம்மை என்னாப்
பார்திசை வானம் முற்றும்
பரிஎன நடாத்தல் உற்றான்.

(2)

தடக்கடல் உடைய மேறாத்
தடவரை இடிய மற்றைப்
படித்தலம் வெடிப்பச் செந்தீப்
பதைபதைத்து ஒடுங்கச் சூறை
துடித்திட அண்ட கூடம்
துளக்குறக் கலாபம் வீசி
இடித்தொகை புரள ஆர்த்திட்டு
ஏகிற்றுத் தோகை மஞ்ஞை.

(3)