பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

35


கொள்ளுகிறான்; நாவின் நலம் போல் பூவில் உயர்ந்த கலம் யாதும் இல்லை என இது குறித்துள்ளது.

நாவின் நுனியில் நயமிருக்கின் பூமாதும் நாவினிய நல்லோரும் நண்ணுவார்-நாவினுனி ஆங்கடி னம்ஆகில் அத்திருவும் சேராள்முன் ஆங்கே வருமரணம் ஆம்.

(நீதிசாரம் 17)

இனிய நாவால் வருகிற உயர்ந்த இன்ப நலன்களும், இன்னா நாவால் எய்துகிற கொடிய துன்பப் புலைகளும் இதில் நன்கு தெரிய வந்துள்ளன.

செயல் துய்மை யானால் அது புண்ணியமாய்ப் பொலிந்து வருகிறது. அதனால் எண்ணரிய நன்மைகளை மனிதன் எளிதே அடைந்து கொள்ளுகிறான்.

எதையும் கூர்ந்து ஒர்ந்து விரைந்து தெளிந்து கொள்வதே அறிவுக்கு அழகாம். குறி பிழையாமல் நேரே சரியாக எய்வதே வில்லாளிக்கு அழகாம். மாறாத போர் ஆற்றலே மல்லாளிக்கு மாட்சியாம்.


இனிமை புனிதம் வன்மை குறிப்பு தெளிவு என்னும் இவை சொல் முதலியவைகளில் முறையே தோய்ந்து வரின் உயர் பயன்கள் வாய்ந்து வரும்.

6.நெஞ்சுக் கணிஎன்றும் நேர்மையே நேர்ந்தபொறி
அஞ்சுக் கணியடக்கம் ஆகுமே-விஞ்சியசீர் :வீரர்க் கனிதோலா வென்றியே வெல்லாத :நீரர்க் கணிசாவே நேர்.

(சு)

இ-ள்.

நேர்மை நெஞ்சுக்கு அழகு அடக்கம் ஐம்பொறிகளுக்கு அழகு; வெற்றி பெறுவதே வீரர்க்கு அழகு: வெல்லாவிடின் வீவதே தீரர்க்கு அழகு என்க.