பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

51


துரியோதனனுடைய படைகளுக்குத் தலைமைத் தளபதியாய் நின்று அடலாண்மையுடன் வீடுமர் அமராற்றி வந்தார். பத்தாம் நாள் போரில் அவர் மாண்டுபட்டார். அப்பொழுது அந்தப் படைகளின் நிலை பரிதாபமாயது.

மதியிலா விசும்பும், செவ்வி மணமிலா மலரும்,தெண்ணீர்
நதியிலா நாடும் தக்க நரம்பிலா நாத யாழும் நிதியிலா வாழ்வும் மிக்க நினைவிலா நெஞ்சும் வேத
விதியிலா மகமும் போன்ற வீடுமன் இலாத சேனை

(பாரதம்)

வீரத்தளபதியான வீடுமனை இழந்தபோது அச்சேனைகள் அடைந்த நிலையை இக் கவி சுவையாக் காட்டியுள்ளது. இதில் குறித்துள்ள ஏழு உவமைகளின் குறிப்புகளையும் கூர்ந்து ஒர்ந்து வீரத் தலைமையைத் தேர்ந்து கொள்ளவேண்டும்.

விலங்கினங்களுள் யானை மிகவும் பெரியது. அதன் மேல் மனிதருள் தலை சிறந்துள்ள அரசன் அலங்காரமாய் ஏறிவரின் அது ஒரு சீரிய காட்சியாய்ச் சிறந்து விளங்கி வரும்.

மணி மகுடம் மன்னனுக்கு மாட்சியான அணி. குடிமகிழ்ந்து வரக் கோல் ஒச்சி வருபவனே முடி மன்னன் என்னும் பெயருக்கு உரியவன் ஆகிறான்.


14.நாட்டுக்கு நல்லவரே நல்ல அணி; நாடிவரு
தேட்டுக்குச் சேயரே செய்யஅணி;-பாட்டுக் :கிசையும் கருத்தும் இனிய அணி; யார்க்கும் வசையுறா வாழ்வே அணி.

(கச)

இ-ள்.

நல்லோரே நாட்டுக்கு நல்ல அழகு; சேயரே தேட்டுக்குச் சிறந்த அழகு;இசையும் கருத்தும்